புரட்சியாளர் சேகுவேரா |
பால்: பொருட்பால்
அதிகாரம் :நட்பு ஆராய்தல்
உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க
அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு .
பொருள்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும்; அதுபோல் துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
வைகறைத் துயிலெழு.
Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.
இரண்டொழுக்க பண்புகள் :
*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.
*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.
பொன்மொழி :
செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்.---சுந்தர் பிச்சை.
பொது அறிவு :
1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது?
கிழக்கு சகாரா பாலைவனம்.
2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது?
ஜெர்மனி.
English words & meanings :
Establish - நிறுவுEstate -பண்ணை
வேளாண்மையும் வாழ்வும் :
இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.
அக்டோபர் 09
சே குவேரா அவர்களின் நினைவுநாள்
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
உலக அஞ்சல் தினம்
உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
நீதிக்கதை
நரியும் கரடியும்
ஒரு ஊரில் நரியும் கரடியும் நட்பாய் பழகி வந்தனர். இந்த நரி எப்போதுமே அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டு இருந்தது. ஒரு நாள் கரடியிடம் அது சொன்னது,” நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்து சம்பாதிக்கலாம்” என்று கேட்டது. அதற்கு அந்தக் கரடியும்,”சரி நண்பா நாம் ஏதாவது விவசாயம் செய்யலாம்” என்றது.
அப்போது இருவரும் சேர்ந்து ஒரு வயலை தேர்ந்தெடுத்தார்கள். அந்த வயலை நன்றாக சுத்தம் செய்து உழுதார்கள். விதைப்பதற்கு முன்பு நரி கரடியிடம் சொன்னது,” நண்பா இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன், நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது .அதற்கு அந்த கரடியும் சம்மதித்தது.
இந்த நரி மிகவும் தந்திரமானது. எனவே சோள விதையை விதைத்தது அறுவடை காலம் வந்த பிறகு இருவரின் ஒப்பந்தம்படி நிலத்திற்கு மேல் விளைந்த அனைத்து சோள வகைகளை நரி எடுத்துக்கொண்டது. ஆனால் கரடிக்கோ வெறும் வேர்கள் மட்டும்தான் மிஞ்சியது. எனவே கரடி நரியிடம் சொன்னது ,”நண்பா போன முறை நீ நிலத்திற்கு மேல் உள்ள அனைத்து விளைச்சலையும் எடுத்து விட்டாய், எனவே இந்த முறை நிலத்திற்கு மேல் விளையும் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன் நிலத்திற்கு கீழ் விளையும் அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்றது.
அதற்கு அந்த நரி சிரித்துக் கொண்டே சம்மதித்தது. இந்த முறை நரி தந்திரமாக நிலக்கடலையை விதைத்தது. இந்த முறையும் விளைச்சல் நன்றாக இருந்தது நிறைய நிலக்கடலைகள் கிடைத்தன. அந்த கரடி சொன்னபடி நிலத்திற்கு மேல் உள்ள அனைத்தையும் கரடி எடுத்துக் கொண்டது நிலத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது. எனவே கிடைத்த நிலக்கடலைகள் அனைத்தையும் நரி எடுத்துக் கொண்டது.
இப்போது இந்த கரடிக்கு நரியின் தந்திரம் புரிந்து கொண்டது. எனவே அது நரியிடம் நட்பாக பழகுவதை நிறுத்திவிட்டு தானே தனியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தது.
நீதி: தீய எண்ணம் உடையவர்களிடம் நட்பாக பழகக் கூடாது.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...