Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

E-SR Entry - Doubt Clarification

 


 நண்பர்களே வணக்கம் 🙏

காலாண்டுத் தேர்வு காலம்...

வழக்கமான பள்ளி பாடவேளை / வகுப்புகளில் இருந்து  மாற்றம்...

நேரம் கிடைக்கும் போது தங்களின் பணிப் பதிவேட்டில் பதிவுகளை சரி பார்த்துக் கொள்ளலாம்...

 E-Sr முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை physical SR ஒரு முக்கிய ஆவணம் 👍

பல தலைமை ஆசிரியர்கள் / ஆசிரிய நண்பர்கள் SR entry சார்ந்து பல சந்தேகங்கள்...

விடுபட்ட பதிவுகள்...

வாரிசு நியமனம் இல்லாமை...

முறையாக பதிவுகள் இல்லாமல்....

இன்னும் பல..... வினாக்களுக்கு....

பணிப் பதிவேடுகள்
 FR 74  (iv) படி..


1) பணியாளர்கள் அவர்தம் பணிப் பதிவேடுகள் பார்க்கும் உரிமை உண்டு
(Xerox copy எடுத்து வைத்துக் கொள்ளலாம்)

2) எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து த.ஆ இடம் பணிப் பதிவேடுகள் சரி பார்க்க பெற்றுக் கொள்ளலாம்.

3) த.ஆ ... பணிப் பதிவேடுகளின் இயக்க பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.

4) முதல் பக்கம்..
GPF/CPS/TPF No... எழுதுதல்... புகைப்படம்...
இதர விபரங்கள்...
பெயர்...
பிறந்த தேதி....
சொந்த ஊர்/ பிறந்த ஊர்
இரண்டாம் பக்கம்
முதலில் பணியேற்ற விவரம்...
பணியாளர் கையொப்பம்...
தலைமை ஆசிரியர்/ அலுவலகத் தலைவர் கையொப்பம் ....

5) கல்வி தகுதிகள்...
Degree certificate... பதிவு மற்றும்
 உண்மைத் தன்மை பெறப்பட்ட விவரங்கள்...

6) பணியில் சேர்ந்த பிறகு... உயர் கல்வி பயில முன் அனுமதி விவரம்

7) பணி நியமனம் ...
பணி நியமன ஊதியம்...
 பணிவரன் முறை...
 தகுதி காண் பருவம்...
பதிவுகள்...

8) ஆண்டு ஊதிய உயர்வுகள்...

9) விடுப்புகள் ... ML, EL.. UEL PA, LLP with MC, LLP with out MC... Etc
( LLP alone, deduct EL)

10) மாறுதல் இன் போது பணி விடுப்பு...
பணி ஏற்பு....
அனுபவிக்காத பணி ஏற்பிடைக்காலம் நாட்கள் EL வரவு ( ஆறு மாதத்திற்குள்)

11) பதவி உயர்வு..
பதவி உயர்வு தற்காலிக துறப்பு...

12) பதவி உயர்வில் பணிவரன் முறை ...
சில நிகழ்வுகளில் (பணித் தொகுதி மாறினால்) பதவி உயர்வில் தகுதி காண் பருவம்...

13) துறைத் தேர்வு தேர்ச்சி

14) தேர்வு நிலை/ சிறப்பு நிலை ஆணை..
 தேர்வு நிலை/ சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம்
( இரண்டு பதிவு...
 a) தற்போது DEO (sec) order மட்டும் வழங்குவார்...
b) சார்ந்த தலைமை ஆசிரியர் தான் ஊதிய நிர்ணயம் செய்து ஆணை வழங்குவார்

( சிலர் தலைமை ஆசிரியர் ஊதிய நிர்ணயம் செய்த விவரத்தை பதிவு செய்ய மறந்து விடுகிறார்கள்)

15) போராட்ட காலம் பதிவு... ஊதிய பிடித்தம் விவரங்கள்..
 போராட்ட காலம் முறைப்படுத்தல்...
மீள ஊதியம் பெற்ற விவரம்..
போராட்ட காலம் பணிக்காலமாக முறைப்படுத்தல்...

போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனில்
அன்னார் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் 2002-03,
2017-2019 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என சான்று...

16) பணிக் காலம் சரி பார்த்தல்...

17) குடும்ப விவரங்கள் பதிவு...

18) பயிற்சிகள்
பாராட்டுச் சான்றுகள்

19) ஊதியக் குழு நிர்ணயம் 2009 ..

தர ஊதியம் மாற்றம் 2011

சிறப்பு நிலை தேர்வு நிலை மாற்றம் 2013 ...

 ஊதியக் குழு 2016 (10/2017) ஊதிய நிர்ணயம்

20) தண்டனைகள்
17 அ 17 ஆ 17 உ ...
ஊதிய உயர்வு நிறுத்தம்
திரண்ட பலன் உடன்
திரண்ட பலன் இன்றி...

இவை ☝️ வழக்கமான பதிவுகள் ( small recall)

இந்த பதிவின் முக்கிய நோக்கம் ☺️

21) SPF 84 பிடித்தம் ஆரம்பம்... 148 தவணை நிறைவு...

 SPF 2000 பிடித்தம்
50/70 விவரம்
(முன்பெல்லாம் SPF 2000 பிடித்தம் கணக்கீடு இருக்கும் உ.ம் 70 (1/359) ...
அதாவது பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் மாதத்திற்கு முன் மாதத்தில் SPF 2k பிடித்தம் நிறைவு செய்யப்படும்
May 2038 இல் ஓய்வு எனில் April 2038 last due) தற்போது யாரும் கணக்கீடு செய்வதாக தெரியவில்லை...🤪...

பள்ளி ஆவணங்கள்/ aquittance அடிப்படையில் எந்த மாதம் முதல் பிடித்தம் என பதிவு செய்யலாம்...
(இன்றைய தேதியில் விடுபட்ட பதிவு என பதிவு செய்யலாம்)
 SPF 84 எனில் 20/- எந்த மாதத்தில் 148 தவணைகள் நிறைவு என்ற விவரம் காட்டாயம் இருக்க வேண்டும்...

22) FBF/FSF தற்போது 110 பிடித்தம் செய்யப்படுகிறது...
பணியில் சேர்ந்தது முதல் பிடித்தம் ...
முதலில் பிடித்தம் பற்றிய விவரம் இல்லாவிட்டாலும் ...

தற்போது 1/9/2021 முதல் ₹110 /- பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரம் இருக்க வேண்டும்...

(இது term insurance போல் தான்..
பணியில் இருக்கும் போது மரணம் எனில் மட்டும் பலன்...)

23) NHIS 2021 ...
தற்போது 295+5 பிடித்தம் விவரம்...
( மருத்துவ சிகிச்சைக்கு NHIS card/ e Card
இரண்டும் இல்லை எனில்
annexure vi + three months pay slip தான் தேவை) அதனால் NHIS deduction SR entry முக்கியத்துவம் பெறுவதில்லை....

24) வாரிசு நியமனம் ...
இதை அனைத்து பணியாளர்களும் கட்டாயம் செய்திடல் வேண்டும்...
ஏற்கனவே பதிவு எனில் updation செய்து கொள்ளலாம்...

 ஐந்து இனங்கள் Nominee.... for

a) GPF/CPS
b) SPF 84/ SPF 2000
c) FBF/FSF
d) DCRG/ Pension (GPF)
e) EL/UEL

SR இல் இதற்கென கூடுதல் தாள்கள் தரப்பட்டு இருக்கும்...

 Nominee change/ மாற்றம் தேவை எனில் முந்தைய பதிவை அடிக்க வேண்டாம்...
தற்போதைய தேதியில் பதிவு செய்யும் போது
 முந்தைய பதிவு தானாக காலாவதியாகிவிடும்...

25) 2017-18 இல் IFHRMS E-SR பணிக்காக நாம் எல்லோரும் update செய்தோம்...
இருப்பினும் தற்போது வரை nominee/வாரிசுதாரர் முறையாக பதிவுகள் இல்லாமல் எதிர்பாராத நிகழ்வு ஏற்படும் போது...

பணியாளர் குடும்பத்திற்கு த.ஆ உரிய பணப் பலன்களை பெற்றுத் தர தயாராக இருந்தாலும்...

முறையான பதிவுகள்/ வாரிசு நியமனம் இல்லாமையால்
 தேவையற்ற சிரமங்கள் /
காலதாமதங்கள் / நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகிறது 😞

 பள்ளி/மாணவர் நலன் சார்ந்து நாம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தாலும்...

 நமக்கான பணியையும் நேரம் கிடைக்கும் போது செய்து கொள்வோம் ☺️...

 சிறு சிறு திட்டமிடல்
வளமான / மகிழ்ச்சியான தருணங்கள்...

SR abstract, (school audit - useful)
SR entry single page,
SR entry model govt letter ( eng, tam)
SPF 2K
FBF/FSF latest GO...
44 pages...
 Single PDF attached
Kindly check it...

E-SR Entry - Doubt Clarification - Download Here


தகவலுக்காக...
 க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம் 625702
மதுரை மாவட்டம்
பதிவு நாள் 22/9/24





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive