காலாண்டு தேர்வும் -விடுமுறை சார்ந்தும் TNPGTA மாநிலக் கழக அறிக்கை..09.09.24
அனைவருக்கும் வணக்கம்...
செப்டம்பர் மாதத்திற்கான காலாண்டு தேர்வு நடைபெறுவது சார்ந்து இதுவரை பள்ளி கல்வித்துறையால் கால அட்டவணை வெளியிடாமல் இருக்கிறது . ஒரு சில மாவட்டங்களில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது..
தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணை ஒரே மாதிரியான தேதிகளில் நடைபெறும் வண்ணம் கால அட்டவணை வெளியிடுமாறு பள்ளிக் கல்வித் துறையையும் தேர்வு துறையையும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்
காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் இடம் பெறும் வகையில் அமைத்திட வேண்டும்.. மேலும் *காலாண்டு தேர்வில் வினாத்தாள்கள் ஒரே மாதிரியாக இருப்பது* என்பது வினாத்தாள்களின் தரமும் அனைத்து அம்சங்களையும் பொதுவான நடைமுறையில் அமல்படுத்துவது என்பது சரியாகவும் அனைத்து மாவட்டமும் ஒருங்கிணைந்த தன்மையில் முறைப்படுத்தப்பட்ட ஒரு அலகின் கீழ் தேர்வு நடப்பது என்பதும் சரியான நடைமுறையாக இருக்கும் என்று எங்களது அமைப்பின் மூலம் கோரிக்கை வைக்கின்றோம்..
இதன் மூலம் மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கும் போது வினாத்தாள் கட்டணம் உள்ளிட்டவைகளை மாணவர்களிடம் பல்வேறு வகையான வகையில் வாங்குவது தடுத்து நிறுத்திடவும் உதவிகரமாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காலாண்டு தேர்வு முடிந்தபின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விடக்கூடிய காலாண்டு விடுமுறை பத்து நாட்களுக்கு மிகாமல் இருந்தது.
தற்போது அது படிப்படியாக குறைக்கப்பட்டு நடப்பாண்டில் இரண்டு வேலை நாட்கள் மட்டுமே விடுமுறையாக அறிவித்திருப்பது உள்ளார்ந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற்று இரண்டாம் காலாண்டை துவக்குவதற்கு தயாராகும் படி அமைத்து வைத்த கட்டமைப்பை மாற்றுவது என்ற அடிப்படையில் இருக்கிறது. இந்த முடிவானது சரியான நடைமுறையாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
மிகச் சிறந்த கல்வியாளர்களும் உளவியல் விஞ்ஞானிகளும் ஆய்வாகவும் அறிக்கையாகவும் பரிந்துரைத்துள்ள தெரிவித்துள்ள விஞ்ஞான கூற்றை மறுதலிக்கும் படி அமைந்து விடும் என்பதையும் பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்..
ஆகவே பள்ளிக்கல்வித்துறையும் தேர்வு துறையும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு அட்டவணையை உடனடியாக வெளியிட்டும், வினாத்தாளை ஒரே மாதிரியான நிலையில் அச்சிட்டு தருவதற்கான ஏற்பாடு செய்தும் மேலும் காலாண்டு தேர்வு விடுமுறையை குறைந்தது ஒரு வார காலம் விடுமுறை அளித்து சரியாக நடைமுறைப்படுத்தும் படி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.. நன்றி
💥💥💥💥💥💥💥💥
மாநில கழகத்தின் சார்பாக
பொ. அன்பழகன்
மாநில பொதுச் செயலாளர்
TNPGTA
Ggd
ReplyDelete