சதீஷ் தவான் |
பால்: பொருட்பால்
அதிகாரம் :நட்பு ஆராய்தல்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.
பொருள்: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
A person never loses his/her nature no matter how hard-pressed.
இரண்டொழுக்க பண்புகள் :
* தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.
* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும். எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.
பொன்மொழி :
"நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை "-----ஒரிசன் ஸ்வெட் மார்டென்.
பொது அறிவு :
1. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
2. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை.
செப்டம்பர் 25
சதீஷ் தவான் அஙர்களின் பிறந்த நாள்
சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.
நீதிக்கதை
நாக்கு
பேரரசன் ஒருவரிடம் வலிமைமிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும் வாட்கள் கொண்ட கவசங்களால் மூடப்பட்டிருக்கும்.
அதன் வாலிலும் இரும்பு கொண்டு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். போர்க்களத்தில் அம்பு படாமல் இருக்க தனது தும்பிக்கையை வெளியே நீட்டாமல் நன்றாக உள்ளே சுற்றி வைத்துக் கொள்வதற்கு பழகி இருப்பார் பாகன்.
ஒரு நாள் போர்க்களத்தில் எதிரிப்படைக்கு பேரழிவை தந்து கொண்டிருந்தபோது,அதனுடைய உடலில் பொருத்தப்பட்டுள்ள ஆயுதம் ஒன்று கீழே விழுந்தது. அதை எடுக்க தனது தும்பிக்கையை நீட்டியது யானை. அதைக் கண்ட பாகன் எதிரிகளின் ஈட்டி தும்பிக்கையில் படாமல் இருக்க யானையை விரைவாக போர்க்களத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்தார்.
அரண்மனையில் அரசரை சந்தித்த பாகன், "அரசே இன்று போர்க்களத்தில் தான் சுருட்டி வைத்திருந்த தும்பிக்கையை வெளியே நீட்டி விட்டது யானை. எனவே, இனி போருக்கு பயன்படாது" என்று கூறினார்.
தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் வரை தான் யானைக்கு வலிமை மற்றும் பாதுகாப்பு.அதுபோல மனிதர்கள் தங்களுடைய நாவை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் அவர்களின் சொல்லுக்கு மதிப்பு.
கோபத்திலும், வெறுப்பிலும் ஏன் சந்தோஷத்திலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேச வேண்டும்.தேவையில்லாத இடங்களில் தும்பிக்கையை யானை சுருட்டி வைத்துக் கொள்வது போல, தேவையில்லாத இடங்களில் நாமும் நாவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...