வெள்ளெழுத்து பிரச்சினையை போக்குவது போக்குவதற்காக உருவாக்கப் பட்ட சொட்டு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலருக்கு 'பிரஸ்பயோ பியா' எனப்படும் வெள்ளெழுத்து பிரச்சினை ஏற்படும். கண்களால் கவனம் செலுத்தும் திறன்குறையும் போது இப்பிரச்சினை ஏற்படும். உலகம் முழுவதும் 180 கோடி பேருக்கு இப்பிரச்சினை உள்ளது. இவர்களால் ரீடிங்கிளாஸ் அணிந்து தான் பேப்பர் படிக்க முடியும். இப்பிரச்சினைக்கு கண்ணாடியின்றி, அறுவை சிகிச்சையின்றி தீர்வு காண என்டாட் பார்மாடிகல்ஸ் என்ற நிறுவனம் 'பிரஸ்வியூ' என்ற சொட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதை கண்ணில் ஊற்றினால் 15 நிமிடத்தில் வெள்ளெழுத்து பிரச்சினையை சரியாகி விடும். அதன்பின் ரீடிங் கிளாஸ் இன்றி பேப்பர் படிக்கலாம். இந்த சொட்டு மருந்துக்கு மத்திய மருந்துகள் நிபுணர் குழு (சிடிஎஸ்சிஓ) ஏற்கெனவே அனுமதி வழங்கி யுள்ளது.
தற்போது இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரும் (டிசிஜிஐ) அனுமதி வழங்கி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...