டிஎன்பிஎஸ்சி
நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள்
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு 644
பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கிய பதவிகளில் 358 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டதேர்வான நேர்முகத்தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம், என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...