நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற அல்லது சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற எழுத வேண்டிய முக்கிய தேர்வு, 'கேட்' எனும் 'கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்'.
முக்கியத்துவம்
கேட் தேர்வு அடிப்படையில் எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் - ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் -ஐ.ஐ.டி., இணைந்து நடத்துகின்றன. கேட் 2025 தேர்வை ஐ.ஐ.டி.,-ரூர்க்கி நடத்துகிறது.
தகுதிகள்
கேட்-2025 தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், கலை, வணிகவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இத்தேர்வில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
தாள்கள்
கேட் தேர்வு, 30 வெவ்வேறு துறைகளுக்கு நடத்தப்படுகிறது. ஒருவர், ஒன்று அல்லது இரண்டு தாள்களை எழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
ஆன்லைன் வாயிலாக பல அமர்வுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 30 வெவ்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும் இத்தேர்வில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பொறியியல் துறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 65 கேள்விகள் கேட்கப்படும். 'மல்டிபில் சாய்ஸ்' கேள்விகள் மற்றும் 'நிமெரிக்கல் ஆன்சர்' வடிவம் ஆகிய இரண்டு முறைகளில் கேள்விகள் இடம்பெறும். தேர்வு மதிப்பெண் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
தேர்வு கட்டணம்
ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 26 தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும். தாமதமாக அக்டோபர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் ரூ. 2,300 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.900 செலுத்தினால் போதுமானது. தாமதமாக செலுத்தினால் ரூ.1400.
தேர்வு நடைபெறும் தேதிகள்:
2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 26
விபரங்களுக்கு:
https://gate2025.iitr.ac.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...