Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மீண்டும் எட்டி பார்த்த EMIS வேலை - அரசு பள்ளி ஆசிரியர்கள் அப்செட்

EMIS%201


  • அரசு பள்ளிகளில் எமிஸ் வலைதளப் பயன்பாடு
  • ஆசிரியர்களுக்கு மீண்டும் வந்த வேலையால் அதிருப்தி
  • நலத்திட்டங்களை மாணவர்கள் உடன் படமெடுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எமிஸ் இணையப் பயன்பாட்டில் இருந்து ஆசிரியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் புதிய சிக்கல் ஒன்று வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதை பள்ளிக்

கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். மிகவும் எளிமையான பணி மட்டுமே, பணிச் சுமையாக இருக்கும் வகையில் எதையும் தரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எமிஸ் என்ற பெயரை கேட்டாலே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அலர்ஜி என்ற காலம் மாறி வருகிறது. இந்த எமிஸ் என்பது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும்

 கல்வி மேலாண்மை தகவல் மையம். இதில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து விவரங்களும் இருக்கும். மேலும் மாணவர்களின் கல்வி சார் செயல்பாடுகள், பள்ளிக் கல்வித்துறை நலத்திட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.

எமிஸ் பணிச்சுமை

இதன் பொறுப்பு ஆசிரியர்கள் வசம் தான் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் வகுப்பறையில் பாடம் நடத்துவதற்கு கூட நேரமின்றி எமிஸ் மிகுந்த பணிச்சுமையாக இருக்கிறது என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இந்த பணியில் பிரத்யேகமாக ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆய்வக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி கொள்ளப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை புகைப்படமாக எடுத்து எமிஸ் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகைப்படம் அப்லோடு

அதுவும், ஒவ்வொரு மாணவர் உடனும் தனித்தனியே நலத்திட்ட பொருட்களுடன் புகைப்படம் எடுத்து அப்லோடு செய்ய வேண்டும். ஒரு வகுப்பறையில் 30, 40 மாணவர்கள் இருந்தால் ஏராளமான புகைப்படங்களை எடுக்க வேண்டும். பின்னர் அதை ஒவ்வொரு படமாக எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை தரப்பு

ஏற்கனவே இருந்ததை போல வகுப்பறைக்கு முழுக்கு போட்டு விட்டு அலுவலகத்தில் அமர்ந்து எமிஸ் வேலையில் கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் விசாரித்தால், மாணவர்கள் நலத்திட்ட பொருட்கள் பெற்றுக் கொண்ட விவரங்களை உறுதி செய்தால் போதும். பதிவு வேண்டாம்.

அதேசமயம் 11ஆம் வகுப்பிற்கு மட்டும் மிதிவண்டிகள் வழங்குவது தொடர்பாக புகைப்படம் எடுத்து பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் 2024-25ஆம் கல்வியாண்டு முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டியில் அவர்களின் எமிஸ் எண்கள் இருக்கும். இது மிதிவண்டி பாகங்கள் பழுதடையும் போது சரிசெய்ய உதவிகரமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive