13 ஆண்டாக ரூ.12,500 குறைந்த சம்பளத்தில்
பணிபுரியும் 12ஆயிரம் பலவகை பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளம் வழங்கி
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் :
முதல்வர்
ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு
கொடுத்த 181வது வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்து 40 மாதங்கள் ஆகிவிட்டது.
இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வில்லை என்பது 12 ஆயிரம் குடும்பங்களை பாதித்து வருகின்றது.
எனவே, முதல்கட்டமாக
பணி நிரந்தரம் குறித்து காலக்கெடுவுடன்
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
பணிக்காலத்தில் இறந்தால் அந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
4-10-2023 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்த 10 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு ஆணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.
இபிஎப் மற்றும் இஎஸ்ஐ திட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும்.
தொலைதூரம் சென்று பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரும்பும் பள்ளிகளில் இடமாறுதல் வழங்க வேண்டும்.
பகுதிநேர
ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை
வாழ்வியல்திறன் பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பேரையும்
சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி தமிழகஅரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏழை விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்கள், தினக்கூலிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே மனிதாபிமானம் கொண்டு,
தமிழக முதல்வரும், தமிழ்நாடு அரசும் பணிப்பாதுகாப்பு வழங்கி,
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை முன்னேற்ற வேண்டும் என மீண்டும் கேட்டு கொள்கிறேன்.
பணி நிரந்தரம் செய்து விட்டால் அனைத்து பண பலன்களும் சலுகைகளும் கிடைத்துவிடும்.
எனவே பணி நிரந்தரம் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு நேர தீர்வாக இருக்கும்.
கல்வித்
தகுதியும், பணி அனுபவமும் கொண்ட 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை
அங்கீகரித்து தற்போதைய வேலையை முறைப்படுத்தி நிரந்தரம் செய்ய வேண்டும்.
************************
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...