Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்மொழி வாசித்தலை எளிமையாக கற்பிக்க புதிய முயற்சி & பயிற்சி!

தமிழ்மொழி வாசித்தலை எளிமையாக கற்பிக்க புதிய முயற்சி & பயிற்சி

*வாசித்தல் பயிற்சி கையேடு அறிமுகம் மற்றும் பயிற்சி!* 

அன்பு நிறைந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். 🙏

மாணவர்களின் ஆங்கில மொழி வாசித்தல் திறனை மேம்படுத்த கடந்த சில வருடங்களுக்கு முன்பு READ ENGLISH BOOKS VIA PHONIC METHOD என்ற வாசித்தல் கையேட்டினை அறிமுகம் செய்திருந்தோம். அந்த ஆங்கில மொழி வாசித்தல் பயிற்சி புத்தகத்தினை பயன்படுத்தி, வாசித்தல் திறனில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தன்னிறைவு பெற்றுள்ளார்கள்.

 ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அடுத்த முயற்சியாகவும் "தமிழ் மொழி" வாசித்தலை எளிமையாக கற்பிக்கவும், மாணவர்களை விரைவாக வாசிக்க வைக்கவும், எளிய முறையினை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். 

இந்த வாசித்தல் கையேட்டினை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிப்பதால் உறுதியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாணவர்களும் எந்தத் தமிழ்ப் புத்தகத்தை கொடுத்தாலும் வாசிக்கும் அளவிற்குத் தன்னிறைவு பெறுவார்கள் என்பதை எனது முதலாம் வகுப்பில் பயன்படுத்தி பார்த்ததன் மூலம் அறிய முடிந்தது. 
 
 *இந்த தமிழ் மொழி வாசித்தல் கையேட்டை அறிமுகப்படுத்தியும், அதனை பயன்படுத்தும் விதத்தையும் பயிற்சியாக தன்னார்வ ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 17.08.2024 சனிக்கிழமை திருச்சிராப்பள்ளியில் வழங்க உள்ளோம்* 

 இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட லிங்கை பயன்படுத்தித் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

ஏனென்றால் எத்தனை ஆசிரியர்கள் வருவார்கள் என்பதனை அறிந்து, அதற்கேற்றார் போல் இடவசதி ஏற்பாடு செய்ய வேண்டும். (கடந்த முறை எதிர்பார்ப்பு 150... ஆனால் ஆசிரியர்கள் வருகையோ 300 எனவே உணவு மற்றும் இடவசதி ஏற்பாடு செய்ய சிரமமாக இருந்தது) 

எனவே வாசித்தல் திறனை மேம்படுத்த இந்த பயிற்சி வித்தியாசமானதாகவும், முழுமையானதாகவும், மாணவர்களுக்கு கற்பிக்கும் விதத்திலும் இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம். 

எனவே இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்திப் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும். 

https://forms.gle/fv4qKTAKQpWBqRai8

தாங்கள் இடம்பெற்றுள்ள மற்ற குழுக்களில் பகிரவும். 

நன்றி! 🙏

இவண்:
*கு.செல்வக்குமார்*
திருச்சிராப்பள்ளி
*8122440081*

சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு
👇👇👇👇👇👇👇👇👇




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive