Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விரைவில் தடையா?


இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விரைவில் தடையா?

உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனம் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விசாரணையை மத்திய அரசு தொடங்கிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் டெலிகிராம் ஈடுபடுவதை அமைச்சகங்கள் குறிப்பாக கவனித்து வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார்.

இதுவரை, டெலிகிராம் விசாரணை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. டெலிகிராம் செயலி நிறுவனர் கைதுக்கு வலுக்கும் கண்டனம்:

விடுவிக்கவும் கிளம்பியது கோரிக்கை!

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது;

விடுவிக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஐரோப்பிய நாடான பிரான்சில், போதை பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டில், அந்த செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

*தனிமனித சுதந்திரம்.*

இது தொடர்பாக அமெரிக்க அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழக்கறிஞருமான ராபர்ட் கென்னடி ஜூனியர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'துரோவ் கைது செய்யப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது.

சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது' என குறிப்பிட்டுள்ளார். *ஆபத்தான காலங்கள்.*

எக்ஸ் சமூக வலைதள உரிமையாளரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' மீம்ஸ் போட்டவர்களை ஐரோப்பிய சிறையில் அடைக்கிறார்கள்.

பிரான்சில் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரியை கைது செய்கிறார்கள்.

'மீம்ஸ்'களை தடை செய்ய அயர்லாந்து முயற்சிக்கிறது.

எக்ஸ் சமூகவலைதள நிறுவனத்தை பிரேசில் நாட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

எக்ஸ் வலைதள பதிவுகளை ஆஸ்திரேலியாதணிக்கை செய்ய முயற்சிக்கிறது.

வரும் 2030ல் ஐரோப்பாவில் மீம்ஸ் போடுபவர்களை தூக்கிலிடும் சூழல் கூட உருவாகலாம்.

இது ஆபத்தான காலங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

*சிவப்புக் கோடு.*

ரம்பிள் (Rumble CEO) தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் பாவ்லோவ்ஸ், ''டெலிகிராமில் பதிவுகளை டெலிட் செய்தததற்காக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவைக் கைது செய்வதன் மூலம், சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளனர்' என பதிவிட்டுள்ளார்.

கைதான துரோவை விடுவிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive