தமிழகத்தில்
புகழ்பெற்ற ஆன்மிக தலமாக இருப்பது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்
பீடம் கோவில். இந்த கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில்
அம்மனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அதனை தொடர்ந்து பட்டிமன்றம், நாடகம், நாட்டியம், கருத்தரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். நடப்பு ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட். 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...