Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் - ஆசிரியர் கூட்டணி போராட்ட அறிவிப்பு

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் TNPGTA மாநில கழகத்தின் சார்பாக செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் போராட்ட அறிவிப்பு - போராட்டத் தயாரிப்பு செய்திகள்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

பேரியக்கத்தின் புரட்சிகர நிர்வாகிகள் தோழர்கள்  அனைவருக்கும் வணக்கம்....

ஒன்றிய அரசின் UPS திட்ட அறிவிப்பானது மோசடியான அறிவிப்பு மேலும் ஊழியர்களின் பணத்தை பிடுங்கி ஊழியர்களுக்கே தருவது போன்ற கடுமையான எதிர் கருத்துக்களும்  விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதிய திட்டமே..


ஆனால் NPS திட்டத்தின் உயர் வடிவமாக UPS திட்டம் ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தி அறிவித்திருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இணையாக இல்லையென்றாலும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது..

ஆனால் தமிழ்நாட்டில் ஆசிரியர் அரசு ஊழியர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பணமானது எந்தத் திட்டத்திலும் சேர்க்காமல் பழைய ஓய்வூதிய திட்டத்தை  வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு 

மௌனம் காப்பது மிகவும் நம்பிக்கை மோசடியான வேலையாகவும் தமிழ்நாட்டில் சமூக பாதுகாப்பற்ற ஊழியர்களை உருவாக்கி நடைபிணமாக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாடு அரசின் இந்த வஞ்சிக்கப்பட்ட சூழலை ஆசிரியர்களும்  அரசு ஊழியர்களும் பெரும் கொந்தளிப்புடன் கோபக் கனலை வெளிக்காட்டி வருகிறார்கள்..

தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கமான தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது..

உறக்கத்தில் இருக்கும் ஜாக்டோ ஜியோ வை தட்டி எழுப்ப வேண்டும்..

ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் இவ்வேளையில் 

தமிழகத்தில் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திட கடுமையான போராட்டங்கள் நடத்தி அறிவிப்பு வெளியிட வைத்து விட வேண்டும் என்ற குரல்கள் வலைத்தளங்களில் தீவிரமாக எதிரொலித்து கொண்டிருக்கிறது..

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக அனைத்து சங்கங்களும் குறிப்பாக ஜாக்டோ ஜியோவும் விழிக்க வைக்க வேண்டிய சூழல் இருப்பதால் தனிச் சங்கமாக நாம் போராட்ட அறிவிப்பு செய்து தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த களம்காண தயாராக வேண்டும் தோழர்களே..


வருகின்ற செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை கொண்டாட்டம் தேவையில்லை.. எங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக.. என்ற அடிப்படையில் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தனிச்சங்கமாக நாம் நடத்தி தமிழ்நாட்டில் தொடங்கி வைக்க வேண்டுமென்ற அறைகூவல்கள் மாநிலக் கழகத்திற்கு வந்துள்ள நிலையில் அது சார்ந்து செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் நடைபெறும் மாநில செயற்குழுவில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளையும் உள்வாங்கி முறையான அறிவிப்பு செய்து போராட்ட களத்திற்கு செல்வோம் தோழர்களே..


இது சரியான நேரமும் சூழலும் கூட.. அதற்கான அழுத்தம் தமிழ்நாட்டிற்கு தற்போது வந்துள்ளது..PFRDA ல் சேராத நிலையிலும், ஒன்றிய அரசுக்கு முன்மாதிரியாக ராஜஸ்தான் பஞ்சாப் ஜார்க்கண்ட் சட்டிஸ்கர் இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு செய்துள்ள நிலையில்.. தமிழகம் அறிவிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளியாக வேண்டும்..

தமிழ்நாட்டில் உள்ள மற்ற சங்கங்களையும் போராட்டத்திற்கு தயார்படுத்த வேண்டும் ..

அந்த அடிப்படையில் மாவட்ட கழக நிர்வாகிகள்,

 கல்வி மாவட்ட நிர்வாகிகள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகின்ற செப்டம்பர் 5 வியாழக்கிழமை மாலை மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒன்றுகூடி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாரிப்பு பணியில் ஈடுபடுமாறு கால அவகாசத்திற்காக முன்னரே தயார் படுத்தி இச்செய்தி வெளியிடப்படுகிறது தோழர்களே..

மாநில செயற்குழுவில் முறையான அறிவிப்பு செய்து கம்பீரமான முறையில் போராட தயாராக வேண்டும்..

 இப்போது விழிக்காவிட்டால்...இனி எப்போது...

ஒன்று படுவோம்... போராடுவோம்..வெற்றி பெறுவோம்..இறுதி வெற்றி நமதே..


💥💥💥💥💥💥💥💥

மாநில கழகத்திற்காக

தோழமையுடன்..

 பொ.அன்பழகன்

மாநில பொதுச் செயலாளர்

TNPGTA

 

 தகவலுடன்..

 ஆசிரியர்

 ரே.மாயவன்

 மாநில செய்தி தொடர்புச் செயலாளர் 

TNPGTA....






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive