தியான்சந்த் |
பால்: பொருட்பால்
குறள் எண்:622
வெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
பொருள்: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும் அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத்துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
A good reputation is a fair estate.
நற்குணமே சிறந்த சொத்து.
இரண்டொழுக்க பண்புகள் :
*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.
* எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.
பொன்மொழி :
இது ஒரு கடினமான பணியின் தொடக்கத்தில் உள்ள நமது அணுகுமுறை, எல்லாவற்றையும் விட, அதன் வெற்றிகரமான முடிவை பாதிக்கும்." - வில்லியம் ஜேம்ஸ்
பொது அறிவு :
1. நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர் _________
விடை : லியூவன் ஹுக்.
2. மரபுப் பண்புகளைக் கடத்துதலில் முக்கியப் பங்கு வகிப்பது______
விடை : DNA
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.
ஆகஸ்ட் 29
தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்
தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
நீதிக்கதை
மணியோசையும் மக்கள் அச்சமும்
ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு காடு இருந்தது. கிராமத்திலிருந்த ஒரு கோவிலில் உள்ள கதவில் ஒரு வெள்ளி மணி கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒரு திருடன் மணியைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டான்.
கோவிலுக்கு சொந்தமான வெள்ளி மணி காணாமல் போனதில் கிராம மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அன்று இரவு அந்த மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பல பக்கங்களிலிருந்தும் மணி ஓசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. இதைக் கேட்டு அம்மக்கள் பயந்துவிட்டனர். கோவில் மணியை திரும்பப் பெறுவதற்கு கிராம மக்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கோவிலில் இருந்த தெய்வம் கோபித்துக் கொள்வதாக அந்த மக்கள் எண்ணி பயந்து போனார்கள்.
மறுநாள் கிராம மக்கள் சிலர் மணியைத் தேடி காற்றுக்குள் சென்றனர். ஆனால் மணி எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஊருக்கு திரும்பினர்.
அந்த இரவும் அவர்களுக்கு மணியோசை கேட்டது. ஒருமுறை ஒரு திசையில் இருந்தும் அடுத்த முறை வேறு திசையில் இருந்தும் மணியோசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. உண்மையிலேயே அந்த மக்கள் மிகவும் நடுங்கிப் போனார்கள்.
மறுநாள், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன், உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிய காட்டிற்குப் புறப்பட்டான். தனியாக காட்டுக்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு முரசு அடிக்கும் சத்தமும் மணியோசையும் கேட்டது. அவன் தைரியமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஒரு முரசு , ஒரு மணி, சில உடுப்புகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டான்.
குரங்குதான் மணியை அடித்து ஓசையை எழுப்பி இருக்கிறது; மரத்திற்கு மரம் தாவுவதால் மணியோசை வெவ்வேறு திசைகளில் இருந்து கேட்கிறது என்பதையும் சிறுவன் உணர்ந்து கொண்டான். அவன் அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான். ஒரு குரங்கு மணியை வைத்து விளையாடியவாரே அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தது ஒரு மரத்தில் உட்கார்ந்தது.
இதற்காக காத்திருந்த சிறுவன், குரங்கின் எதிரே சில பழங்களையும் கொட்டைகளையும் வீசி எறிந்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு குரங்கு பழங்களையும் கொட்டைகளையும் பார்த்தது. அவற்றை எடுப்பதற்காக மரத்திலிருந்து இறங்கியது. சிறுவன் விரைந்து சென்று மணியை எடுத்துக் கொண்டான். கிராமத்திற்கு ஓடிவந்தான். காட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கிராம மக்களிடம் விவரமாக எடுத்துக் கூறினான். சூழலை உணர்ந்து சிந்தித்து செயல்பட்ட சிறுவனை அனைவரும் பாராட்டினார்கள்.
நீதி: எதையும் தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதே நன்று.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...