இரத்த சிவப்பணுக்கள் |
பால் : பொருட்பால்
அதிகாரம்: காலம் அறிதல்
குறள் எண்490
கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து.
பொருள்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல அமைதியா இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
Better to bend the neck than bruise the forehead.
தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
இரண்டொழுக்க பண்புகள் :
*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.
* எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.
பொன்மொழி :
கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். –லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன்
பொது அறிவு :
1. சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்:
விடை:100 - 120 நாட்கள்.
2.மாமரத்தின் சிற்றினப் பெயரைக் குறிப்பிடுக.
விடை: இண்டிகா
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். ஆட்டுக் கல்லில் தான் முன்னால் மாவு ஆட்டி வந்தார்கள்
நீதிக்கதை
குதிரையும் கழுதையும்
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில், பண்ணையின் சொந்தக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு குதிரை ஒன்றும் கழுதை ஒன்றும் இருந்தன. குதிரைக்கு எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். ஆனால் கழுதைக்கு அதுபோல் கவனிப்பும், உணவும் கிடைக்கவில்லை. எனவே கழுதைக்கு எப்போதும் ஒரு மனக்கவலை இருந்தது.
“நான் நன்கு வேலை செய்தும் என்னை சரியாக கவனிக்கவில்லை, ஆனால் வேலையே செய்யாமல் இருக்கும் குதிரையை மிகவும் நன்றாக கவனிக்கிறார்கள்” என்று கழுதை எண்ணியது. நாட்கள் கடந்து சென்றன, ஒரு நாள் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது. பண்ணைக்காரன் தன் குதிரை மேல் ஏறி யுத்தத்திற்கு சென்றான்.
பல நாட்களுக்குப் பின் குதிரையையும், எஜமானனும் வீட்டிற்கு திரும்பினர். வீட்டிற்கு வரும்போது குதிரையின் காலில் பலமான அடிபட்டிருந்தது. காயத்தினால் உடல் புண்ணாகி இருந்த குதிரையைப் பார்க்க கழுதைக்கு மிகவும் பாவமாக இருந்தது.
இதுவரை குதிரைக்கு கிடைத்த உபசரிப்பு பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்தது கழுதைக்கு புரிந்தது. கழுதை குதிரையிடம் சென்று, “நண்பா, இந்நாள்வரை உனக்கு கிடைத்த உபசரிப்பை நினைத்து நான் பொறாமை பட்டுள்ளேன். உன்னை நான் தவறாக எண்ணி உள்ளேன், தயவு செய்து என்னை மன்னித்துவிடு” என்று கூறியது.
அன்று முதல் கழுதை குதிரையிடம் நட்பாக பழகியது. இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். அதுமட்டுமில்லாமல் கழுதை தன்னை பண்ணைக்காரன் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று கழுதை வருத்தப் படவுமில்லை.
நீதி : நமக்கு கிடைப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...