மேலும்,மோசடி முறையில் சிம் கார்டுகளை பெற்றால் ரூ.50 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு உங்கள் ஆதாருடன் எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நீங்கள் ஒரு சிம் கார்டை பயன்படுத்தவில்லை என்றால், அந்த சிம் கார்டை உங்கள் ஆப்ரேட்டரிடம் கூறி துண்டித்து விடலாம்.ஆதாருடன் இணைக்கப்பட்ட சிம் கார்டுகள் : உங்கள் ஆதாருடன் எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றியும், அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றியும், நீங்கள் உபயோகிக்காத சிம் கார்டுகளை எவ்வாறு டிஆக்டிவேட் செய்வது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
DoT-இன் புதிய இணையதளத்தைப் பயன்படுத்தி இந்த செயல் முறையை சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம். DoT-இன் சஞ்சார்சதி (Sancharsathi.gov.in) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் பயனர்கள் அவர்களின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய அனைத்து சிம் கார்டு நம்பரையும் சரி பார்த்துக் கொள்ள முடியும்.உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களின் எண்ணிக்கையை எவ்வாறு கண்டுபிடிப்பது?:
ஸ்டெப் 1: நீங்கள் முதலில் அரசு தொடங்கியுள்ள https://sancharsaathi.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதில் கொடுக்கப்பட்டிருக்கும் "Know your mobile connection" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அதில் உங்களுடைய மொபைல் நம்பர், கேப்ட்ச்சா கோடை (Captcha) என்டர் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: நீங்கள் என்டர் செய்த மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: அதில் உங்கள் ஆதார் நம்பருடன் தொடர்புடைய அனைத்து எண்களையும் காண்பிக்கும்.இதே இணையதளத்தின் உதவியால் உங்களுக்கு தேவைப்படாத அல்லது நீங்கள் பயன்படுத்தாத நம்பரை பிளாக் செய்யலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...