தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. வனத்துறை செயலராக உள்ள சுப்ரியா சாகு சுகாரத்துறை செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் கே.மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை சுகாதாரத்துறை செயலராக இருந்த ககன்தீப் சிங்பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலராக இருந்த செந்தில் குமார் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
- Click Here to Download - G.O 3238 - IAS Officers Transferred - Orders - PDF
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...