திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன.
பாப்பாக்குடி அருகே மாணவர்களிடையே நடந்த தகராறில் ஒரு மாணவன் கொல்லப்பட்டான். வள்ளியூர் பள்ளியில் பயின்ற நாங்குநேரியை சேர்ந்த பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடந்தது.
இதற்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்படுவதும், ஜாதி ரீதியாக மாணவர்களை அவர்கள் துாண்டி விடுவதும் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஜாதி மோதல் ஏற்பட்டது.
கலெக்டர் கார்த்திகேயன் பரிந்துரையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருநெல்வேலி டவுன், மருதகுளம், நாங்குநேரி, கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், தலைமை ஆசிரியர்களுடன் சேர்ந்து கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் கோபிதாஸ் திருநெல்வேலியில் தங்கி ஆய்வு மேற்கொண்டார். பணியிட மாறுதலுக்கு ஆளான ஆசிரியர்கள், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து முறையிட்டனர். இருப்பினும், கலெக்டர் உறுதியாக இருப்பதால், பணியிட மாறுதலை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...