புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு தற்போதைய சலுகை மூலம் ரூ.17,500 சலுகை கிடைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
வருமான வரி திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ. 50,000இல் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி முறையில் புதிய சலுகைகள், ரூ.3 லட்சம் வரை வருமான வரி இல்லை, ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வருமானவரி செலுத்த வேண்டும்.
ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை 10%, ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை 15% வருமானவரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20%, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
விலக்குகள் எதுவும் இல்லாத நடைமுறையில் உள்ள புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது என 2023-2024-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்துக்கு அதிகரித்து, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோருக்கு
அடிப்படை வரி விதிப்பு வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள புதிய விதிப்பு முறையில் ரூ.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.7 லட்சம் என உயா்த்தப்பட்டுள்ளது; புதிய வரி வதிப்பு முறையின் கீழ் நிரந்தரக் கழிவு ரூ.50,000 அனுமதிக்கப்படுகிறது என மத்திய நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு, பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு, ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத வகையில் ரூ.2.4 லட்சம் கோடி, மூலதன முதலீடுகளுக்காக ரூ.10 லட்சம் கோடி, வேளாண்துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக சிறப்பு நிதி எனப் பல்வேறு அம்சங்களுடன் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப்.1) தாக்கல் செய்தாா்.
பழைய வரி விதிப்பு முறையில் மாற்றமில்லை: வருமான வரியைப் பொருத்தவரை பழைய வரி விதிப்பு முறை, புதிய வரி விதிப்பு முறை என இரு வகையான வரி விதிப்பு முறைகள் நடைமுறையில் உள்ளன; பழைய வரி விதிப்பு முறையைத் தோ்வு செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரையில் வருமான வரி இல்லை; இத்தகையோருக்கு வீட்டு வாடகைப் படி (ஹெச்ஆா்ஏ), வீட்டுக் கடனுக்கான வட்டி, 80சி, 80டி படிவங்கள் உள்ளிட்டவற்றின் கீழ் விலக்கு கோருதல் ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய வரி விதிப்பு முறையில்...: புதிய வரி வதிப்பு முறையில் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளோருக்கு வருமான வரி இல்லை என்ற புதிய அறிவிப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது; புதிய வரி விதிப்பு முறையில் விலக்குகள் கிடையாது என்ற நிலை தொடா்கிறது. எனினும், புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோா் ஆண்டு வருமானத்தில் ரூ.50,000-த்தை நிரந்தரக் கழிவாக கழித்துக் கொள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோா், இரு முறைகளில் (பழைய வரி விதிப்பு முறை அல்லது புதிய வரி விதிப்பு முறை) ஏதாவது ஒன்றைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு முறையில், ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் புதிய முறையின் கீழ் ரூ.33,800 வரை சேமிப்பா் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் ரூ.23,400-ம், ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் ரூ.49,400-ம் சேமிப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்குகள் ஏதுமற்ற புதிய வரி விதிப்பு முறை 2020-21ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், அதன் கீழ் செலுத்தப்படும் வரி சற்று அதிகமாக இருந்ததால், அந்த முறைக்குப் பெரும்பாலானவா்கள் மாறவில்லை. அதைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய வரி விதிப்பு முறை சீரமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரைப் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாற வைக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
NEW TAX REGIME
Standard deduction at 75000 vs 50000 earlier
Tax rates changed in New Tax regime
- 0-3lakh - Nil
- 3-7 lakh -5%
- 7-10 lakh -10%
- 10-12 lakh -15%
- 12- 15lakh -20%
- Above 15Lakh -30%
Capital Gains Tax:
- Short Term now 20%
- (instead of 15%)
- Long term now 12.5%
- (instead of 10%)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...