இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன் இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தொடக்கக் கல்வி இணை இயக்குநர் ச.சுகன்யா மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக பணியாற்றும் ச.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (நிர்வாகம்) பணியமர்த்தப்படுகிறார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக (நிர்வாகம்) உள்ள அ.ஞானகவுரி மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (மேல்நிலைக்கல்வி) நியமிக்கப்படுகிறார்.
தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) பணியாற்றி வரும் க.ஸ்ரீதேவி இடமாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் இணை இயக்குநரான செ.சாந்தி மாற்றப்பட்டு தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) நியமிக்கப்படுகிறார்.
பள்ளிக் கல்வி இணை இயக்குநரான (தொழிற்கல்வி) எம்.ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, தனியார் பள்ளிகள் இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநராக பணியாற்றி வரும் வெ.ஜெயக்குமார் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) நியமிக்கப்படுகிறார்.
ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரான கே.முனுசாமி இடமாற்றம் செய்யப்ப[ட்டு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மற்றொரு இணை இயக்குநரான ந.ஆனந்தி மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...