Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2024

 

   

 டாக்டர் முத்துலட்சுமி





திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண் :429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக்கொள்ள வல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

பழமொழி :

பேராசை பெரு நஷ்டம்

Much would have more, and lost all

இரண்டொழுக்க பண்புகள் : 

 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.

பொன்மொழி :

கற்றவர்களிடம் கற்பதை விட ... கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்..! ----காரல் மார்க்ஸ்

பொது அறிவு : 

1. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?

விடை: மூங்கில்

2. வருமான வரி என்பது

விடை: ஒரு நேர்முக வரி

English words & meanings :

 affair-விவகாரம்,

  title-தலைப்பு

வேளாண்மையும் வாழ்வும் : 

காட்டுயாணம் அரிசி:
இது பண்டைய தமிழர் பயன்படுத்திய அரிசி வகையாகும். இது மானாவாரி பயிராகும், காட்டில் வாழும் யானையின் உடலின் எடையை தாங்கும் கால்கள் போல, வலிமையான எலும்புகள் பெற உதவும்

ஜூலை 30

டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாள்

முத்துலட்சுமி (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) மருத்துவர்சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.[

நீதிக்கதை

 பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும்.


ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான். 


ஒருநாள் அவன் வழக்கம் போல் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது                   ஓர் அரசமரத்தின்   பக்கமிருந்து, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்று குரல் கேட்டது.


விறகுவெட்டி அந்த மரத்தின் அருகில் சென்றான். “நான் இந்த மரத்தில் வசிக்கும் அரக்கன். இந்த அரசமரத்தின் கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது. உனக்குத் தேவையானால் தோண்டி எடுத்துக்கொள்” என்றது அந்தக் குரல். 


விறகு வெட்டி, “ஏழு ஜாடி தங்கம்” என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அவசர அவசரமாக அந்த மரத்தின் கீழே பள்ளம் தோண்டினான். அரக்கன் சொன்னது போலவே, பூமிக்குள் ஏழு ஜாடிகள் இருந்தன. விறகு வெட்டி எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். அவற்றின் உள்ளே தங்கம் இருந்தது. 


ஆனால், ஒரே ஒரு ஜாடியில் மட்டும் பாதியளவுதான் தங்கம் இருந்தது. “பாதிதானே குறைகிறது… இதை எப்படியும் நாம் நிரப்பி விடலாம்” என்று எண்ணி, ஏழு ஜாடிகளையும் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தான் விறகு வெட்டி. வீட்டுக்கு வந்ததும், ஏற்கெனவே தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பாதியளவு இருந்த ஜாடியில் போட்டான். பிறகு ஜாடி நிறையத் தங்கம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்பை விடக் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதித்தான். அதனைத் தங்கமாக்கி அந்தச் ஜாடிக்குள் போட்டான். 


அவன் எவ்வளவு தங்கத்தைச் ஜாடியில் போட்டாலும் ஜாடி நிரம்பவே இல்லை. விறகு வெட்டியும் விடவில்லை, எப்படியாவது அந்த ஜாடி நிரம்பத் தங்கத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தான். இதனால் அவன் நிம்மதி போயிற்று, தூக்கம் போயிற்று. உணவு உண்ணவும் மறந்தான்.


 இறுதியில் அவன் துரும்பாக இளைத்து விட்டான்.  ஒருநாள் அவன் நண்பன் ஒருவனைப் பார்த்தான். அவன் விறகு வெட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவனுடைய நிலைமைக்குக் காரணம் என்னவென்று கேட்டான். விறகு வெட்டி நடந்த கதை அனைத்தையும் கூறினான். 


விறகு வெட்டி சொன்னதைக் கேட்ட அவன், “இந்த ஏழு ஜாடி தங்கத்திற்கு ஆசைப்பட்டு  மனநிம்மதியைக் கெடுத்துக் கொண்டாயா?"என்றான்.


” அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்வது? என்று கேட்டான் விறகு வெட்டி. இந்த ஜாடிகளை எடுத்துச் சென்று முன்பிருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, “பேராசையைத் தூண்டி விட்டு மன நிம்மதியைக் கெடுக்கும் உன் ஏழு ஜாடி தங்கத்தை நீயே வைத்துக் கொள்” என்று அரக்கனிடம் கூறிவிட்டு வந்துவிடு என்றான் விறகு வெட்டியின் நண்பன். 


விறகு வெட்டியும், மறுநாள் தன் நண்பன் கூறியபடியே ஏழு ஜாடிகளையும் எடுத்துச் சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு நண்பன் தன்னிடம் கூறியபடியே அரக்கனிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான். அதற்கு பிறகு விறகு வெட்டியின் பேராசை முழுவதும் தணிந்திருந்தது. அவன் மனநிம்மதியுடன் வாழ்ந்தான்.


நீதி: ஏதாவதொரு பொருளின் மீது நாம் பேராசை பட்டால் நமது மனநிம்மதிதான் கெடும். எனவே, ஆசையை அளவோடு வைத்துக் கொண்டு வாழப் பழக வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.07.2024

🍄தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசிகள்: தமிழக அரசு திட்டம்.

🍄தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் கோரியது மாநில தேர்தல் ஆணையம்.

🍄மேட்டூர் அணை நீர் திறப்பு 20,000 கன அடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை.

🍄கல்லீரல் அழற்சி நோய்களை ஒழிக்க, பிறக்கும் குழந்தைகளுக்கு மறக்காமல் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

🍄கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🍄காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🍄பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் பிரனாய் வெற்றி.

🍄2-வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா.

🍄 2-வது மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன்.

Today's Headlines

🍄Free vaccinations will be provided for all children even in private hospitals too: Tamil Nadu Govt plan.

 🍄Tamil Nadu Local Elections will be conducted Soon: State Election Commission Requests Voter List.

🍄 Mettur dam water release raised to 20,000 cubic feet: Flood alert for 11 districts

 🍄Selva Vinayak, Director of Tamil Nadu Public Health Department, said that hepatitis B vaccine can be administered free of charge to primary health centers to eliminate liver inflammation diseases.

 🍄In the last 5 years, 633 Indian students have died abroad due to various reasons including accidents, according to the Ministry of External Affairs.

🍄 According to the Palestinian Ministry of Education, 10,000 students and 400 teachers have been killed so far in the Israeli attack on the Gaza Strip.

🍄 Paris Olympics: India's Pranai wins men's singles badminton

🍄 2nd T20: India beat Sri Lanka to clinch the series.

 🍄 Washington Freedom defeated San Francisco in the 2nd Major League Cricket Series and won the championship.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive