டாக்டர் முத்துலட்சுமி |
பால்: பொருட்பால்
அதிகாரம் :அறிவு உடைமை
குறள் எண்:423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்: எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
Great engines turn on small pivots
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே வந்து சேரும் ------விவேகானந்தர்
பொது அறிவு :
1. ISI என்பதன் விரிவாக்கம்?
2. யானையின் துதிக்கையில் எத்தனை தசைகள் உள்ளன?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
கருப்பு கவுனியில் உள்ளநார்சத்து(Fiber) மற்றும் ஆன்டி ஆக்சிடன்ஸ் (anti – oxidants) புற்று நோய், சர்க்கரை குறைபாடு நோய்களின் தாக்கத்தைக் குறைக்கின்றது, மேலும் கல்லீரலில் உள்ள பாதிப்புகளை குறைக்கின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழ சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுணி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.
ஜூலை 22
டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் நினைவுநாள்
நீதிக்கதை
ஆண்டவனிடம் பெற்ற அறிவு
பீர்பாலின் மீது அரசர் அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பதை அறிந்த அவையில் இருந்த சில அமைச்சர்களுக்கு பொறாமையாக இருந்தது.
அறிவுமிக்க பீர்பாலை மட்டம் தட்ட முடியாத ஒரு அமைச்சர் அவரின் மாநிறமான தோற்றத்தை கொண்டு மட்டம் தட்ட நினைத்தார். அதனால் அரசவையில் அமர்ந்திருந்த பீர்பாலை பார்த்து அந்த அமைச்சர் ஏளனமாக சிரித்தார்.
இதனை கவனித்துவிட்ட அரசர் அக்பருக்கு கோபம் ஏற்பட்டு "அமைச்சரே! பீர்பாலை பார்த்து எதற்காக ஏளனமாக சிரித்தீர்கள்?" என்று கேட்டார்.
"மதிப்பிற்குரிய மன்னர் பெருமானே! கோபப்பட வேண்டாம். எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் சிரித்தேன்" என்றார் அமைச்சர்.
"என்ன சந்தேகம்?" என்று வினவினார் மன்னர்.
"மன்னர் பெருமானே! தாங்கள் ஜொலிக்கும் தங்கம் போன்ற மேனியை பெற்றுள்ளீர்கள்.
அமைச்சர்களாக உள்ள நாங்களும் நல்ல சிவந்த மேனியுடன் உள்ளோம். ஆனால் நமது பீர்பால் மட்டும் நிறத்தில் சற்று கருத்து காணப்படுகின்றார்.
ஆகையினால், நம்மோடு அமர்ந்திருப்பதினால்,மன்னரின் நிறம் பிரகாசமாகவும், பீர்பாலின் நிறம் கருத்தும் இருப்பதினால் நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல் உள்ளதோ என்று சந்தேகமாக இருந்தது. அதனால் சிரித்தேன்" என்றார்.
அமைச்சர் இது போன்று கூறியதும் மன்னருக்கு அமைச்சரின் மதிகெட்ட பேச்சு புரிந்தது. அதனை வெளிக்காட்டு கொள்ளாமல் "பீர்பால் அவர்களே! அமைச்சர் கூறியதற்கு சரியான விளக்கம் அளியுங்கள். மேலும் இது போன்ற கேள்வி எப்போதும் கேட்க இயலாத அளவுக்கு பதில் இருக்க வேண்டும்"என்றார் அக்பர்.
மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி, " "மாமன்னர் அவர்களே! வணக்கம். இறைவன் அன்பானவன் எல்லோரையும் சமமாக பாவித்து அருள் பாலிப்பவன். ஒவ்வொருவரையும் படைக்கும் போது அவரவர் விருப்பப்படி அவரவருக்கு என்ன தேவையோ அதன்படி படைத்துவிட்டார்.அதன்படி
அமைச்சர்கள் விருப்பப்படி அவர்களுக்கு நல்ல நிறத்தையும், எனது விருப்பப்படி எனக்கு நல்ல அறிவையும் கொண்டு கடவுள் படைத்துவிட்டார்"என்றார் பீர்பால்.
பீர்பாலின் பதிலைக் கேட்டு, அமைச்சர் வெட்கி தலை குனிந்தார்.
இன்றைய செய்திகள்
நன்றி
ReplyDelete