Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: ஜூலை 22-ம் தேதி கடைசி நாள்

யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 22-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா - இயற்கை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா - இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) மேற்கண்ட 2 அரசு கல்லூரிகளில் 160 இடங்களும், 17 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 800-க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இதற்குமாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இப்படிப்பில் 2024-25-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கியது.

சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.tn.gov.in)ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம், தகவல் தொகுப்பேடு ஆகியவற்றை பதிவிறக்கம்செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்வதற்கான அவகாசம் ஜூலை 22-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ,தபால், கூரியர் மூலமாகவோ ‘செயலர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை,சென்னை-600 106’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive