கடந்தாண்டில்
தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில், 30-க்கும்
குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, வட மாவட்டங்களில்
உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதும்
தெரியவந்துள்ளது. அதற்கு காரணம், பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள்
இல்லாததால், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதையே பெற்றோர்கள்
விரும்புகின்றனர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்லூரி திட்ட இயக்குநரகம் 2023 - 24ஆம் கல்வியாண்டின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு கழிவறைகளை பராமரித்தல், கழிவறையை சுத்தம் செய்வதற்கான பொருட்களை வாங்குதல், பள்ளிகளை பராமரிப்பு செய்வதற்கான பொருட்களை வாங்குதல், பிற செலவுகள் என்று மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளுக்கு நிதி வழங்கி உள்ளார். தற்போது மாணவர்களின் எண்ணிக்கையுடன் இயங்கக்கூடிய அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...