Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2024

 

  

செளரவ் கங்குலி




திருக்குறள்: 

பால் :பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:412
செவிக்குணவு இல்லாத பொழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பொருள்:செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாத போது
(அதற்கு துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

பழமொழி :

Many a slip between the cup and the lip.

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை

இரண்டொழுக்க பண்புகள் :


*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.

*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.

பொன்மொழி :

செய்த தவறை ஏற்பதே தன்மானத்தின் சிகரம் ஆகும்.
காந்தியடிகள்

பொது அறிவு : 

1. 1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்

விடை: எம்.ஜி.ராமச்சந்திரன்

2. 
கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் யார்?


விடை: சானியா மிர்சா.

English words & meanings :

 excitement-உற்காசம்,

 eagerness- ஆவல்

வேளாண்மையும் வாழ்வும் : 

நம்முடைய மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்று. இயற்கை வேளாண்மையை விவசாயத்தில் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது, மண்ணின் தன்மை சிதைவடையாமல் இருக்க உதவுகிறது

ஜூலை 8

செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Gangulyஒலிப்பு; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்

நீதிக்கதை

 ஓவியம்


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார் அவர் மிகப்பெரிய வீரர்.அவர் வெற்றி காணாத போரே இல்லை என்று கூறும் அளவிற்கு மிகப்பெரிய திறமைசாலி. 

நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த மிகச்சிறந்த புகழ்பெற்ற அரசர் அவர்.

அவருக்கு ஒரு மகன் இருந்தார்.  அழகான அறிவான இளவரசன்

 ஆனால்,அவன் முதுகில் ஒரு கூன் இருந்தது. அவனால் எப்போதும் குனிந்தே தான் நடக்க இயலும். இவ்வாறு தன்மகனை பார்க்கும் போதெல்லாம் அரசர் மிகவும் வருத்தம் அடைந்தார்.

அண்டை நாடுகளில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர்களை வரவழைத்து,இளவரசருக்கு  சிகிச்சை  அளித்தும் எந்த பலனும் இல்லை. இளவரசனின் கூன் சரியாகவே இல்லை.

இறுதியாக பக்கத்து நாட்டில் ஒரு  வயது முதிர்ந்த மருத்துவரைப் பற்றி கேள்விப்பட்ட  அரசர் அவரை வரவழைத்து இளவரசருக்கு சிகிச்சை அளிக்க வேண்டினார்.

 அவரின் ஆலோசனைப்படி மருத்துவம் நடக்க ஒரு சில ஆண்டுகளில்  இளவரசனின் கூன் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்பித்து, கடைசியில் இளவரசர் நன்றாக நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

 மன்னர் மகிழ்ச்சியுடன் மருத்துவருக்கு பொன்னும் பொருளையும் பரிசாக கொடுத்தார். 

அந்த மருத்துவரின் மருத்துவ முறையோ சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் மருத்துவர்  இளவரசருக்கு மருந்துகள் எதுவும் கொடுக்கவில்லை.பதிலாக   அவர் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன் கூடிய ஒரு ஓவியம் ஒன்றை வரைய கட்டளையிட்டார். வரைந்த ஓவியத்தை இளவரசர் அன்றாடம் பார்க்கும் படியான இடங்களில் எல்லாம் வைக்க ஏற்பாடு செய்தார். அந்த படங்களை பார்க்க பார்க்க இளவரசருக்கு நாமும் ஒரு நாள் நன்றாக நடப்போம் என்ற மன எண்ணம் ஆழ்மனதில்  உருவானது. அந்த எண்ணமே விரைவில்  வெற்றி பெற்றது.

ஆம். மாணவர்களே! உங்களின் குறிக்கோள்களை ஓவியமாகவோ  எழுத்து வடிவமாகவோ வரைந்து தாங்கள் பார்வை படும்படியான இடங்களில் வையுங்கள். உங்கள் குறிக்கோளும் ஒரு நாள் நிஜமாகும்.

இன்றைய செய்திகள்

08.07.2024

# காவிரிப் படுகையில் அகழாய்வு செய்தால், நிறைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கருத்து.

# மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.

# தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

# மத்திய பட்ஜெட் ஜூலை 23-ல் தாக்கல்: வருமான வரிச் சலுகை எதிர்பார்ப்பு.

# இந்தோனேசியாவின்  சுண்ணாம்புக் குகையில் 51,200 ஆண்டுப் பழமையான ஓவியங்களை ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

# தமிழக பள்ளி அணிகளுக்கான லீக் ஹாக்கி போட்டி 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது.

# கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் அணியை வீழ்த்தி உருகுவே அரையிறுதிக்கு முன்னேற்றம்.

# விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின்  டெய்லர் பிரிட்ஸ்.

Today's Headlines

🌸Amarnath Ramakrishnan, superintendent of the archeology department of the central government, is of the opinion that if excavation is carried out in the Cauvery basin, a lot of archeological remains are likely to be found.

🌸The flow of water to Mettur dam has increased to 2,832 cubic feet per second.

🌸Tamilnadu, Puducherry and Karaikal areas are likely to receive rain for 7 days from today, according to the Chennai Meteorological Department.

🌸Union Budget presented on July 23: Income tax relief expected.

🌸Researchers from Australia and Indonesia have discovered 51,200-year-old paintings in a limestone cave in Indonesia.

🌸The league hockey competition for Tamil Nadu school teams started yesterday in 38 districts.

🌸Copa America: Uruguay beats Brazil to advance to semi-finals.

🌸Wimbledon Tennis: America's Taylor Britts advanced to the 4th round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive