பால் :பொருட் பால்
அதிகாரம்:கல்லாமை
குறள் எண்:408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
பொருள்: கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்
உள்ள வறுமையை விட மிக்க துன்பம் செய்வதாகும்.
Calm before the storm. stoop to conquer.
புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
" பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான்"----விவேகானந்தர்
பொது அறிவு :
1. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?
2. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றனர்.
ஜூலை 02
உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்
சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.
நீதிக்கதை
விட்டுக் கொடுத்தல்
பழங்காலத்தில் வேடர்கள் குரங்குகளை பிடிக்க ஒரு யுக்தியை கையாண்டனர்
குறுகிய வாய்ப்பகுதி கொண்ட கனமான ஒரு கண்ணாடி ஜாடியில் குரங்குகளுக்கு பிடித்த உணவை அடைத்து குரங்குகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைத்து விடுவார்கள்
குரங்குகள் அதை பார்த்ததும் ஜாடியில் கையை விட்டு உணவை எடுக்க முயலும்.ஆனால் கை வெளியே வராது. அந்தக் கனமான கண்ணாடி ஜாடியை தூக்கவும் முடியாது.
குரங்குகளும் விடாப்பிடியாக உணவை கையில் வைத்துக் கொண்டே கையை எடுக்க முயலும். ஆனால் உணவை விட்டுக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம் என்பது அறியாமல் உணவை கெட்டியாக பிடித்துக் கொண்டே இருக்கும். கடைசியில் வேடனிடம் மாட்டிக் கொள்ளும்.
நம் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லவும் எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் கடந்து செல்ல வேண்டும் ,எந்த இடத்தில் நின்று போராடி ஜெயிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...