Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS -தளத்தில் “ Focused Learners class Update - DSE Proceedings

 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிததிறன் குறைவான மாணவ / மாணவிகளின் விவரம் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IMG-20240621-WA0035

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் , அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன் வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ / மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் இக்கல்வியாண்டிலும் வழங்கப்பட வேண்டும்.

 2024-25ஆம் கல்வியாண்டில் , EMIS -தளத்தில் “ Focused Learners class VI to IX என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive