நாடு
முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமானோா் கடந்த செவ்வாய்க்கிழமை எழுதிய
தேசிய தகுதித் தோ்வு (நெட்) ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம்
புதன்கிழமை அறிவித்தது.
தோ்வில் முறைகேடு
நடந்திருப்பதாக இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய இணைய
குற்ற அச்சுறுத்தல் ஆய்வுப் பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த
நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள்
மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கு தகுதி
பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும்
தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நெட் தோ்வு நடத்தப்படுகிறது.
நிகழாண்டுக்கான
தோ்வு, நேரடி எழுத்துத் தோ்வு முறையில் கடந்த செவ்வாய்க்கிழமை நாடு
முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,205 தோ்வு மையங்களில்
இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. இதில் 9,08,580 போ் பங்கேற்றனா்.
இந்த
நிலையில், இந்தத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது.
இதுகுறித்த தகவல் யுஜிசி மற்றும் மத்திய கல்வி அமைச்சக எக்ஸ் பக்கத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வுப்
பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில், நெட் தோ்வில் முறைகேடு நடந்திருக்க
வாய்ப்பிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, ஜூன் 18-ஆம்
தேதி நடத்தப்பட்ட நெட் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. இத் தோ்வு புதிதாக
மீண்டும் நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.
அதே
வேளையில், தோ்வு முறைகேடு புகாா் தொடா்பான விசாரணை மத்திய புலனாய்வு
அமைப்பிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...