ஹெலன் கெல்லர் |
திருக்குறள்: |
அதிகாரம் :கல்லாமை
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்
கொள்ளார் அறிவுஉடை யார்.
பொருள்: கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும்
அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.
Hitch your wagon to a star. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
" கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது!"---- காமராஜர்.
பொது அறிவு :
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
நமது அரசாங்கம் உழவையும் உழவர்களையும் மேம்படுத்த அதற்கென்று ஒரு தனி துறையை உருவாக்கி வேளாண்மையை பல வழிகளில் ஊக்குவித்து வருகிறது.
ஜூன் 27
பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்
பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்
ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்
ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.
பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்
பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிக்கதை
அன்பை விதையுங்கள்
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்கி செல்வார். பழங்களை எடை போட்டு அதற்குரிய தொகையை செலுத்திய பின்பு அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்து பிரித்து வாயில் வைத்துவிட்டு "என்ன பழங்கள் புளிப்பாக இருக்கிறது" என்று புகார் கூறி அந்த பழத்தை பாட்டியிடம் கொடுத்து சாப்பிடக் கூறுவார்.
உடனே பாட்டி ஒரு சுளையை எடுத்து வாயில் போட்டுவிட்டு "இல்லை தம்பி சுவையாக தானே இருக்கிறது" என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவி அவரிடம் "ஏங்க! பழம் இனிப்பாக தானே இருக்கிறது ஏன்? அந்தப் பாட்டியிடம் தினமும் குறை கூறுகிறீர்கள்"? என்று கேட்டார்
அதற்கு அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே மனைவியிடம் அந்தப் பாட்டி சுவையான பழங்களை தான் விற்கிறார்கள் ஆனால் ஒரு பழத்தைக் கூட அவர்கள் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் தற்போது நான் குறை கூறுவதால் அதை வாங்கி காசு இழப்பின்றி சாப்பிடுகிறார்கள் என்று கூறினார்.
அருகில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காய்கறி வியாபாரி அந்த இளைஞன் தினமும் உங்கள் பழத்தைக் குறை கூறுகிறார் இருந்தும் நீங்கள் ஏன் எடை அதிகமாக போட்டு அவருக்கு பழத்தை கொடுக்கிறீர்கள் என்றார்.
அதற்கு அந்தப் பாட்டி புன்னகையுடன், "அவன் என்னை ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காக தினமும் குறை கூறுகிறான். மேலும் நான் எடையை அதிகமாக போடவில்லை அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது அவ்வளவுதான்" என்றார் அன்போடு.
அன்பை விதையுங்கள் அன்பையே அறுவடை செய்யுங்கள் .
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...