திரு.வி.பி.சிங் |
பால்: பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
குறள் எண்:401
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்.
பொருள்: அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல்,
சூதாடும் அரங்கு
இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.
Humility often gains more than pride.
அடக்கம் ஆயிரம் பொன் தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
"உங்களின் நாளைய எதிர்காலம், இன்றைய செயல்களில் இருக்கிறது!"-----மகாத்மா காந்தி
பொது அறிவு :
1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?
2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
தேசிய பொருளாதாரத்திற்கு விவசாயம் மிகவும் முக்கியமானது. முதலாவதாக, விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியின் காரணமாக இது ஒரு நாட்டிற்கு அந்நியச் செலாவணியாக செயல்படுகிறது
ஜூன் 25
2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.
வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்
நீதிக்கதை
எதற்கும் காலம் உண்டு
குரங்கு ஒன்று மாமரத்தில் பறித்த பழத்தை சுவைத்தபடி தன்னுடைய இருப்பிடம் வந்தது.
பழத்தின் கொட்டையை கீழே போட்ட போது யோசனை ஒன்று தோன்றியது.
தன்னுடைய இருப்பிடத்தில் கொட்டையை மண்ணில் விதைத்து மரமாக வளரச் செய்தால் மாம்பழங்கள் வந்த பின்பு இஷ்டத்திற்கு சாப்பிடலாமே என்று எண்ணியது.
பின்பு மாங்கொட்டையை மண்ணில் விதைத்து தண்ணீர் விட்டது. குரங்கின் மனம் மாம்பழத்தை பறித்து உண்பதிலேயே இருந்ததே தவிர மரத்தை வளர்ப்பதில் இல்லை.
தினமும் காலையில் வந்து மண்ணை பறித்து விதையை எடுத்து முளைவிட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு திரும்பவும் மண்ணில் விதைத்து விட்டு தண்ணீர் ஊற்றும்.
தினமும் இப்படி எடுப்பதும் விதைப்பதுமாக இருந்தால் விதை எப்படி முளைக்கும்?
விதை முளை விடவே இல்லை
ஒரு நாள் காலையில் எடுத்து பார்த்த குரங்கிற்கு கோபம் வந்து அந்த மாங்கொட்டையை காட்டிற்குள் வீசி எறிந்தது.
குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும் அதனுடைய அவசரம் நியாயமானது அல்ல .
எந்த ஒரு செயலிலும் வெற்றி வேண்டுமானால், முயற்சியுடன் அதற்குரிய காலமும் அவசியம்
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...