Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரியில் Old Regime தேர்வு செய்தவர்கள் கவனத்திற்கு ...

அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் அன்பான கவனத்திற்கு , 

ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைப்படுத்தபட்டுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:


1.மே 15 - க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile- ல் PAN Number update செய்ய வேண்டும்.

2. PAN Number இல்லாத பணியாளர்களுக்கு வருமான வரித்துறையின் விதிகளின் படி தானாகவே 20 % Income Tax பிடித்தம் செய்யப்படும்.

3. Old Regime தேர்வு செய்த பணியாளர்கள் தங்களது சேமிப்பு தொகை deduction ( GPF / CPS / AISPF / NPS / FBF / FSF / SPF / NHIS / PLI / PT / 80G DONATION THROUGH SALARY ஆகியவற்றை தவிர்த்து ) . மே 15 - க்குள் ( Savings ) IFHRMS ல் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் IFHRMS ன் மூலம் Income Tax Auto Calculation மூலமாக பிடித்தம் மேற்கொள்ளப்படும் . அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் IT தொகையினை மாற்றம் செய்ய இயலாது.

 4. ஒவ்வொரு மாதமும் Payroll Run- க்கு முன்னதாக IT தொகையை மாற்றிக்கொள்ளலாம் .  

5. Old Regime தேர்வு செய்த பணியாளர்கள் டிசம்பர் மாதம் 10 - ம் தேதிக்குள் தங்களது சேமிப்பு மற்றும் செலவுகளுக்கான அசல் ரசீதுகளை Scan செய்து IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6 .அவ்வாறு அசல் ரசீதுகளை பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் December மாதம் முதல்ா கூடுதலாக பிடித்தம் செய்யப்படும்.

7. அனைத்து பணியாளர்களும் அவரவர் Income Tax Projection Report- ஐ Employee Service -- > Reports -- > Income Tax Projection Report Self Service பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive