அது சார்ந்த நெடுந்தகவல் வழிகாட்டி:👇👇👇👇👇👇
அன்புமிக்க 3,300 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் 27000 ஆசிரியர்கள் , அரசுப்பள்ளி பெற்றோர்கள் , அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு +2 முடித்துள்ள சுமார் 4 லட்சம் குழந்தைகள் , ஆகியோரது கனிவான கவனத்திற்கு ....
6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த 7.5% கோட்டா தகுதியுடைய அனைத்து குழந்தைகளுக்கும்
வணக்கம்.
இந்தியாவின் GER 27%
தமிழ்நாடு GER 52%
தமிழ்நாட்டில் +2 முடிக்கும் அனைத்து குழந்தைகளும் கல்லூரி சென்று உயர்கல்வி கற்று பட்டங்கள் பெற்று "கல்வி சிறந்த தமிழ்நாடு " எனும் பெருமையை உறுதி செய்து தற்போதைய 52% GER ஐ 100% ஆக மாற்ற தமிழக அரசு பெரு முயற்சி எடுத்து வருகிறது.
அதனை உறுதி செய்திட
BE MBBS Agri BVSc BSc BA BCom Polytechnic ITI என அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எந்த படிப்பு சேர்ந்து படித்தாலும் 7.5% கோட்டா குழந்தைகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் காலம் வரை மாதம் ரூ. 1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது +2 Result வெளிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது .
என்ன படிக்கலாம். ?
எங்கே படிக்கலாம் ? நமது மதிப்பெண்களுக்கு இடம் கிடைக்குமா ?
7.5% கோட்டா 100% Free Seat கிடைக்குமா ? No Hostel Fees. No College Fees.
OC BC BCM MBC DNT மாணவ மாணவிகளுக்கான முதல் பட்டதாரி சலுகை ரூ. 27500 கிடைக்குமா ?
SC ST மாணவ மாணவிகளுக்கான Tuition Fees ரூ.55000 கிடைக்குமா ?
இதெற்கெல்லாம் என்னென்ன சான்று வாங்க வேண்டும். ?
இப்படி பல குழப்பங்கள் நமக்குள் இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள 7.5% கோட்டா Seats தோராய கணக்கு & தேவையான Approximate Cut-off 👇👇👇
Engineering Seats
BE Seats 11,250
Phy Che Maths 60 + 60 + 60
Agri Horticulture Seats
BSC Agri & B.Tech Agri 150 seats
Annamalai Agri 16 Seats
B.F.Sc & B.Tech 8+3 Seats
Phy Che Maths Bio
80+80+80+80
Law College Seats
SOEL BL 36 Seats
Affliated Law Colleges 75
4 பாடங்களில் 85 +85+85+85
(மாற்றுத்திறன் மாணவர்கள் Pass ஆகி இருந்தால் போதும்)
NEET தேர்ச்சி பெற்ற 7.5% குழந்தைகளுக்கு...
MBBS Seats 444
BDS Seats 222
NEET Result June 14
வெளியான பிறகு
Veterinary Colleges Admission Notification வெளியாகும்.
B.V.Sc 41 Seats
B.Tech 9 Seats.
தேவையான Cutoff
Phy Che Bio 93 +93 +93
மேற்காண் Cut off ல் 10 - 15 Cut off குறைவாக உள்ளவர்களும் விண்ணப்பித்து 7.5% கோட்டா Seat ஐ பிடிக்க முயற்சி செய்யலாம்.
மேற்கண்டவாறு தமிழ்நாடு அரசின் முழு உதவியுடன்
7.5% கோட்டாவில் எந்தவித College Fees Hostes Fees எதுவும் இல்லாமல்
6 - 12 அரசுப்பள்ளியில் படித்த குழந்தைகள் படிப்பதற்காக உள்ள மொத்த 7.5% இடங்கள் சுமார் 12250.
அரசுப்பள்ளியில் படித்து தற்போது +2 முடித்துள்ளவர்கள் சுமார் 4 லட்சம் பேர்.
இவர்களில் அதிக Cut off வைத்துள்ள சுமார் 12250 பேருக்கு மட்டும் தான் 7.5% கோட்டா Free சீட் கிடைக்கும்.
மற்றவர்கள் ???
எங்கே படிப்பது ? ? ? எப்படி படிப்பது ???
7.5% சீட் கிடைக்காத OC BC BCM MBC DNC குழந்தைகள் தங்கள் அப்பா அம்மா அண்ணன் அக்கா பட்டப்படிப்பு படிக்கவில்லை எனில் அப்பா அம்மா அண்ணன் அக்கா ஆகியோரின் ஒரிஜினல் TC களை இ-சேவை மையத்தில் Scan செய்து "முதல் தலைமுறை பட்டதாரி சான்று " பெற்றால் Engineering College Tuition Fees ல் 27500 ஐ அரசு செலுத்தும்.
7.5% கோட்டாவில் சீட் கிடைக்காத பெற்றோர் ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் உள்ள SC ST குழந்தைகளுக்கு PMSS திட்டத்தின் கீழ் Engineering College Tuition Fees (Approx 55000) அரசு செலுத்தும். 2,50,000 க்குள் வருமானச் சான்று முக்கியம்,
மேற்காண் BE BSC Agri Fisheries BL BVSc BTech படிப்புகளில் 7.5% கோட்டாவும் கிடைக்கவில்லை.
முதல் தலைமுறை பட்டதாரி சலுகையும் கிடைக்கவில்லை.
எனில்
அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளான
கோவை PSG
கோவை CIT
மதுரை தியாகராஜா போன்ற கல்லூரிகளில் SS எனப்படும் Self Supported படிப்புகளை தேர்வு செய்யலாம். College fees 80000 + Hostel 50000
அரசு பொறியியல் கல்லூரிகளில் Colleges Fees 10000 + Hostel Fees 48000 சேரலாம்.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் Fees 20000 + Hostel Fees 50000 சேரலாம்.
அதிலும் Seat கிடைக்காத Maths Biology குழந்தைகள் 👇👇👇
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் BSC Nursing & B.Pharm & BPT உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவ பட்டப்படிப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம்.
(MBBS BDS சேர்க்கை முடிந்த பிறகு செப்டம்பர் 2024ல் சேர்க்கை தொடங்கும்) (மாணவரது Nativity Certificate & தாய் தந்தை இருவரது சாதிச் சான்று மிக மிக முக்கியம் )
இடம் கிடைக்காதோ என சந்தேகத்தில் உள்ளவர்கள்
தங்கள் ஊர்களுக்கு அருகில் உள்ள
Govt Arts Colleges and
Govt. Aided Arts Colleges களில் உள்ள சுமார் 1 லட்சம் இடங்களுக்கு
20.05.2024 க்கு முன்
www.tngasa.in என்ற இணைய முகவரியில்
பத்து கல்லூரிகளை தேர்வு செய்து 100 படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும்.
Arts College விண்ணப்ப கட்டணம் ரூ.50 மட்டுமே.
அதே போல் NIRF Ranking தர வரிசையில் சிறந்து விளங்கும் Govt. Aided Arts Colleges சென்னை திருச்சி மதுரை கோவை போன்ற நகரங்களில் உள்ளன. அந்த கல்லூரிகளில் உள்ள Aided Courses and Self Finance பட்டப்படிப்புகளுக்கும் இன்றே இப்பொழுதே விண்ணப்பம் போடவும். இன்று அல்லது நாளை Websites close ஆகி விடும்.
குழந்தைகள் முதலில் விண்ணப்பிக்க வேண்டிய கல்லூரிகள்
சென்னை திருச்சி மதுரை கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள Govt Aided Arts Colleges இன்று or நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்தந்த கல்லூரி Website ல் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணம் கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும்.
அடுத்து விண்ணப்பிக்க வேண்டியது 164 அரசு கலைக்கல்லூரிகள்
கடைசி தேதி 20.05.2024
விண்ணப்ப கட்டணம் ரூ 50. (SC ST PWD ரூ.2 மட்டும் போதும்)
அதற்கடுத்து பொறியியல் படிக்க www.tneaonline.org
கடைசி தேதி 06.06.2024
விண்ணப்ப கட்டணம் ரூ.500 (SC ST PWD 250)
அதற்கடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகம் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்
களுக்கும் ஒரே Application போதும்.
கோவை திருச்சி கரூர் நாமக்கல் நாகை தூத்துக்குடி சிதம்பரம் போன்ற ஊர்களில் B.Sc Agri & B.Tech. & B.F.SC. படிக்க
www.tnagfi.ucanapply.com
விண்ணப்ப கட்டணம் ரூ.600 (SC ST PWD 300)
கடைசி தேதி 6.6.2024
அதற்கடுத்து
5 ஆண்டு சட்டம் படிக்க விரும்புவோர்
தமிழ் ஆங்கிலம் தவிர பிற 4 பாடங்களில் 85 85 85 85 மதிப்பெண்கள் வைத்திருப்போர் மட்டும்
www.tndalu.ac.in ல் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறன் குழந்தைகள் Pass ஆகி இருந்தால் போதும். அவசியம் விண்ணப்பம் செய்யவும்.
அரசுப் பள்ளிகளில் +2 முடித்த ஆனால் 7.5% கோட்டா இல்லாத குழந்தைகள்
IISER IAT (Last date 15.05.24) IMU BBA (LAST DATE 30.06.24,) மற்றும் NSER NEST ( LAST DATE 30.05.24) மற்றும் NCERT CEE ( NOT YET OPEN) மற்றும் NATA (5 ஆண்டு Architecture படிப்பு படிக்க) போன்ற தேர்வுகளை எழுதி மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இடம் பிடித்தால் 7.5% குழந்தைகளைப் போலவே உங்களுக்கும் கல்வி உதவிகள் செய்யப்படும்.
அரிய பெரிய வாய்ப்பு.
தவற விட்டு விட வேண்டாம்.
மேலும் விபரங்களுக்கு
கல்லூரி விபரங்கள் Education Loan விபரங்கள் பெற அரசுப் பள்ளி குழந்தைகள் தயங்காமல் அழைக்கவும். 14417
நன்றி.
திரு. ஜெயராஜ் முத்துவேல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...