இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதிதொடங்கியது. இதுவரை 56,515 மாணவர்கள் (நேற்று மாலை 6 மணி நிலவரப்படி) பதிவு செய்துள்ளனர்.
அதில் 24,258 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். மேலும், 8809 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாகதுரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வசதியில்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுகுறித்த சந்தேகம் இருப்பின் 01800-425-0110 எனும் எண் அல்லது tneacare@gmail.comமின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலை, அறிவியல் சேர்க்கை: அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 70,326 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...