அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்த இடங்களில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் அன்றே 29,097 பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில், 17-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 320 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துவிட்டதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார். தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...