அதன்படி நேற்று முதல் கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. பி.இ. மற்றும் பி.டெக் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கியது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. ஜூன் 6ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும், விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டை போலவே மாநிலம் முழுவதும் 110 சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விண்ணப்ப பதிவு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் காலை 8 முதல் 6 மணி வரை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள அழைப்பு மையத்திற்கு, 1800-452-0110 என்ற எண்ணுக்கு போன் செய்து தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு tneacare@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பலாம். சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அட்டவணைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தெரிவித்துள்ளது. பி.இ, பி.டெக் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாள் மாலை 6 மணி நிலவரப்படி 20,097 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் 5,812 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும், 1519 பேர் சான்றிதழ்கள் பதிவேற்றமும் செய்துள்ளனர்.
விண்ணப்ப பதிவு தொடக்கம் மே 6
விண்ணப்ப பதிவு இறுதி நாள் ஜூ ன் 6
சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12
ரேண்டம் எண் வெளியீடு ஜூன் 12
சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13 முதல் ஜூன் 30
தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 10
சேவை மையம் வாயிலாக
குறைகளை நிவர்த்தி செய்தல் ஜூலை 11 முதல் ஜூலை 20
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...