தமிழ்நாட்டில் , கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் , 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் , புதிய பாரத எழுத்தறிவுத் திட்டமானது முற்றிலும் தன்னார்வல முறையில் , அனைத்து 38 மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 இலட்சம் பேர் தங்களது அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாறு பெற்ற கல்வியின் மூலம் அன்றாட வாழ்வில் தற்சார்பு , வாழ்வியல் திறன்களில் மேம்பாடு , சுய வருவாய் ஈட்டுதலில் முன்னேற்றம் , அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நிதி மேலாண்மையில் தெளிவு , அடிப்படைச் சட்டங்களிலும் மற்றும் அரசு சார் திட்டங்களிலும் போதுமான விழிப்புணர்வு போன்ற போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப்பெற்று இத்திட்டக் கற்போர்கள் பயனடைந்துள்ளனர்.
தற்போது , பார்வையிற் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட ஒப்புதல்களின்படி , வருகின்ற 2024-25ஆம் ஆண்டிற்கு தங்கள் மாவட்டம் சார்ந்த அனைத்து ஒன்றியங்களுக்கான கற்போர் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை இலக்கினை உரிய கணக்கெடுப்பின் வாயிலாக நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
Proceedings - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...