இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை கட்டணம் செலுத்தும்.
அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (ஏப்.22) முதல் rte.tnschools.gov.in என்றஇணையதளம் வாயிலாகஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 20-ம் தேதி ஆகும்.விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், அந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...