கற்பனையின் சிறகு மீது கடல்களைக் கடக்கலாம்
பரிசாக கிடைத்த புத்தகங்களுடன் மாணவர்கள் மகிழ்ச்சி
உலக தன்னார்வ அமைப்பான இளைஞர்களுக்கான, புத்தகங்களுக்கான சர்வதேச வாரியத்தால் ஆண்டுதோறும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் நாடுகள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் இரண்டாம் தேதி உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்குவிப்பதற்காகவும் புத்தகங்கள் மீதான அன்பை ஊக்குவிக்கவும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் நினைவை போற்றும் வகையில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இவர் குழந்தைகள் கொண்டாடும் விசித்திர கதைகளுக்காக மிகவும் பிரபலமானவர். மேலும் புத்தகங்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். இந்த கொண்டாட்ட செயல்பாடுகளில் குழந்தைகளிடம் சிறார் எழுத்துப் போட்டிகள் நடத்துதல், புத்தக விருதுகள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்குவிப்பதற்காகவும் புத்தகங்கள் மீதான அன்பை ஊக்குவிக்கவும் கொண்டாடப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு....
👇👇👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...