மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2023-24ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக UDISE 2021-22ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.
பார்வை 3 ல் காணும் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி 50 சதவீதம் பள்ளி மானியம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக விடுவிக்கப் பட்டுள்ளது . தற்போது பார்வை 4 ல் காணும் சென்னை -6 , மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீத பள்ளி மானிய தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் ரூ 632072500 ( ரூபாய் அறுபத்து மூன்று கோடியே இருபது இலட்சத்து எழுபத்திரண்டாயிரத்து ஐநூறு மட்டும் ) பள்ளிக் கல்வி இயக்குநருக்கு விடுவிக்கப்பட்டு , மானியத் தொகை பள்ளிக் கல்வி இயக்குநரின் வங்கி கணக்கிற்கு பெறப்பட்டுள்ளது . எனவே பார்வை 4 ல் காணும் மேற்காண் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீதம் பள்ளி மானிய தொகையினை இணைப்பில் கண்டவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் ( Fund Transfer ) செய்திட பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக அலுவலருக்கு ஆணை வழங்கப்படுகிறது.
இந்நிதியினை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tablet- க்கு தேவையான SIM- ற்கான ஜுன்'24 மாதத்திற்கான தொகையினை மட்டும் ( Rs.110 / -per Teacher ) பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ளவும் , பள்ளி மானியத் தொகையினை பார்வை 3 ல் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மற்றும் மேற்கூறிய முன்னுரிமை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தாமல் உரிய காலத்திற்குள் நிதியினை பயன்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு : பணப்பரிமாற்ற வங்கி எண் விவரப் பட்டியல்
👇👇👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...