Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2024

   

பிரக்ஞானந்தா




திருக்குறள்: 

பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி 

குறள்:394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

விளக்கம்:

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

பழமொழி :

Strike hard while the iron is hot

அலை மோதும் போதே தலை மூழ்கு

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.____ரமண மகரிஷி

பொது அறிவு : 

1. தபால் தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு எது?

விடை: மலேசியா 

.2.  “இரவும் பகலும்” என்பது?

விடை: எண்ணும்மை 

English words & meanings :

 Inscrutable - impossible to understand புரிந்து கொள்ள முடியாதது
Iniquity - immoral or unfair behaviour அநீதி, அநியாயம்

ஆரோக்ய வாழ்வு : 

*தேனின் மருத்துவ குணங்கள் சில*


1)விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.


2)குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

ஏப்ரல் 12

நெ. து. சுந்தரவடிவேலு 


பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadiveluஅக்டோபர் 121912 - ஏப்ரல் 121993தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்,[3] துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் [4] பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.

நீதிக்கதை

 வேரும், இலையும்


ஓர் ஊரில் ஒரு குடும்பம் வளப்பமாக வாழ்ந்து கொண்டிருந்தது. குழந்தைகள் தந்தையின் பேச்சை தட்டாமல் மரியாதையுடன் கேட்டார்கள். ஒரு சமயம் அந்தத் தந்தை தனது இரு புதல்வர்களின் புத்திசாலித்தனத்தை சோதித்துப் பார்க்க விரும்பினார். என்ன செய்வது என்று சிந்தித்து, ஆளுக்கு ஒரு சிறிய மாமரச் செடியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். விரைவில் இனிப்பான பழங்களை அதிகமாகத் தருகிற மரத்தை வளர்க்கும் சிறுவனுக்கு பரிசு தருவதாகவும் அறிவித்தார்.

முட்டாளாகிய சிறுவன் தான் வளர்த்து வந்த செடி பெரிதாகி, மரத்தின் இலைகள் யாவும் உதிர்வதைக் கண்டான். சிறிது காலத்தில் கிளையின் நுனியில் பூக்கள் பூப்பதையும் அவன் கண்டான். ஒவ்வொரு இலையின் மீதும் தண்ணீர் ஊற்றினான். என்ன ஆயிற்று? கிளைகளில் இருந்த இலைகள் மேலும் அதிகமாக உதிர்ந்தன. வளர்ந்து நீண்டு நின்ற மரமும் சீக்கிரமே பட்டுப்போயிற்று. ஆனால் அறிவுள்ள சிறுவன் என்ன செய்தான் தெரியுமா? இதற்கு மாறாக மரத்தின் வேருக்குத் தண்ணீர் ஊற்றினான். மரம் கிடு கிடுவென்று பசுமையாக செழித்து வளர்ந்தது. குறுகிய காலத்திலேயே இனிப்பான பழங்களை நிறையத் தந்தது.

அதுபோல மனிதனின் அறிவு வளர்ச்சியை பரிசோதிக்க கடவுள் மனிதப் பிறவியை நமக்குக் கொடுத்திருக்கிறார். முட்டாள் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? நிலையான அமைதியும் அமரத்துவமும் பெற விரும்புகிறார்கள். குறுக்கு வழியில் போகிறார்கள். அதற்காக புலன்களின் விருப்பத்தை நிறைவேற்றவும், உலகியல் ஞானம் பெறவும் முயற்சிக் கிறார்கள். அதுதான் சரியான வழி எனவும் நினைக்கிறார்கள்இது தவறு. பகுத்தறிவில்லாத அவர்கள் வீணே பரிதாபமாக இறக்கிறார்கள். இதற்கு மாறாக அறிவுடையவன் என்ன செய்கிறான்? அனைத்து படைப்புகளுக்கும் மூலமாக இருக்கும் இறைவனை நினைந்து தியானம் செய்கிறான். அவன் மனம் ஒருநிலைப்படுகிறது. இதன் மூலம் உலகில் அனைத்துச் செல்வமும், ஞானமும் அவனுக்கு கிடைக்கிறது. இறைவன் நிலையான பேரானந்தத்தையும் அளிக்கிறார். அதனால் நாமும் இறைவனை நம்பி நம் முழு மனதையும் சில நேரங்களுக்கு அவருக்காக அரப்பணிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

12.04.2024

*இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு நடுகல்: திறப்பு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு.

*தமிழகத்தில் வரும் 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

*இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6000 கட்டுமான தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு செல்ல உள்ளனர்.

*சைபர் கிரைமில் உலக அளவில் இந்தியாவுக்கு பத்தாவது இடம்.

*கேண்டிடேட் செஸ் போட்டி: ஆறாவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி.

Today's Headlines

*Monument for theTamilians who lost their lives in World War II: Invitation is given to TN  Chief Minister for the inauguration 

 *Chance of moderate rain till the 16th in Tamil Nadu.

 * The war between Israel and the Hamas organization has created a labor shortage.  6,000 construction workers trained through the "Skill India Program" conducted by the central government are going to Israel.

 *Globally India ranks 10th in cybercrime.

 *Candidates Chess Tournament: Pragnananda wins the sixth round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive