SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 20.03.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 15.03.2024 முதலும் , தேர்வு மையப் படிவங்களை ( Centrewise Nominal Roll , Seating Plan , CSD Forms ш Coverwise Script Detail ) 18.03.2024 பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது . தற்போது அத்தேதிகளுக்கு மாற்றாக 20.03.2024 முற்பகல் முதல் தேர்வுகூட நுழைவுச்சீட்டினை அனைத்து பள்ளிகளும் மற்றும் 20.03.2024 பிற்பகல் முதல் தேர்வு மைய படிவங்களை தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID . Password- ஐ பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...