அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.
முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று மார்ச் 5 – செவ்வாய்க்கிழமை (மாலை 6 மணி) கடைசி நாள்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரங்களாக சர்வர் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் செய்வதறியாது தவித்தனர்.
நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகைய சூழலில், கால அவகாசம் நீட்டிக்க கோரி விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேரத்தை நீட்டித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...