உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தற்போது இயேசுபிரானின் பாடுகளை தியானிக்கும் வகையில் தவசு காலத்தை அனுசரித்து வருகிறார்கள். தவசு காலத்தின் மிக முக்கிய நிகழ்வாக புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த புனித வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்து ஞாயிறு என்று கடைபிடிக்கப்படுகிறது.
இயேசு கோவேரி கழுதையில் ஏறி ஓசன்னா என பாடி அவரை அழைத்துச் சென்றதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குறுத்தோலையை கையில் ஏந்தி பேரணியாகச் சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுவது உலகம் முழுவதும் தொன்று தொட்டு நடந்து கொண்டிருக்கக் கூடிய நிகழ்வு. இந்த வருடம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மக்கள் குருத்து ஞாயிறு கடைபிடிக்கிறார்கள்.
அதே நாளில் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது தமிழகத்தில் தேர்தல் முதல் பயிற்சி வகுப்பு என அறிவித்துள்ளது எனவே சிறுபான்மையினர் கிறிஸ்தவ மக்களின் இறை வழிபாட்டை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் பயிற்சி வகுப்புக்கான தேதியை மாற்றி மதச்சார்பின்மை நாடு என்பதை கடைபிடிக்க வேண்டும் என கிறிஸ்தவ மக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...