கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலும், பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவானது மாவட்டத்துக்கு தகுதியான 4 பள்ளிகளை அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்து பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைத்தது. அதில் சிறந்த பள்ளிகளாக ஒரு மாவட்டத்துக்கு 2 பள்ளிகள் வீதம் மொத்தமாக 76 பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக தேர்வுசெய்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதுவிரைவில் வழங்கப்பட இருக்கிறது.
அந்தவகையில் சென்னையில் அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி, செங்கல்பட்டில் நந்திவரம் அரசு தகைசால் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நூக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காஞ்சிபுரத்தில் மேவளூர்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவள்ளூர் கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...