தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை 3 லட்சத்து31,548 குழந்தைகள் நிறைவு செய்து வெளியே வரவுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி அந்தந்த முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டஅலுவலருடன் சேர்ந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர வழிசெய்ய வேண்டும். மேலும், வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கும் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இடங்கள் வழங்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கை விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...