இயற்பியலை
பூ என்று
நம்பியிருந்த
மாணவர்களுக்கு
மீண்டும்
முள் என்று தன்
அசல் முகத்தைக்
காட்டியது..
ஐந்து
மதிப்பெண்ணில்
வந்த
மீட்டர் சமனச்சுற்று
பார்த்ததும்
பல பேருக்கு
தலைச்சுற்றுதான்
ஏற்பட்டது..
'நீண்டநேர்கடத்தி'
பயட்சாவர்ட்
படித்தவனுக்கு
'வட்டவடிவ '
கம்பிச்சுருள்
வந்ததும்
தெரியாமல்
அங்கேயே
வட்டமடிக்க
ஆரம்பித்தான்
அச்சுக்கோடு
அச்சம்
தவிர்த்தது..
ஐன்ஸ்டீன்
ஒளிமின் விளைவு
வந்ததில் தான்
நோபல்பரிசு
வாங்கிய
சந்தோஷம்
அவனுக்கு..
உட்கவர்
வெளியீடு நிறமாலை
வராமல்
ஏதோ வந்து
அவனை
ஏதேதோ
செய்தது..
திசை தெரியாதிருந்தவனை முப்பட்டக
திசைமாற்றுக்
கோணம்
வந்து வழிகாட்டியது..
மூன்று
மதிப்பெண்
ஓராண்டு
வஞ்சத்தை
ஒரேயடியாய்
தீர்த்தது..
இதுவரை
கேட்காத
கேள்விகளை
கேட்டவர்
வீட்டில்
சண்டை
போட்டு வந்து
வினா எடுத்தார்
போல..
அப்படி வாங்கியிருந்தார்
பழியை..
முக்கிய
வினாக்களை
மூட்டைகட்டிவிட்டு
'தேமே'என்றிருந்த
வினாக்களை
தேடிப்பிடித்து
கேட்டிருக்கிறார்..
இரண்டு
மதிப்பெண்ணில்
அவரின் கோபம்
தணிந்து
சமாதானக்கொடி
அங்கங்கு
பறந்தது..
ஒரு மதிப்பெண்
மட்டும்
மாணவனுக்கு
முதுகு
காட்டாமல்
முழுவதுமாய்
முகம் காட்டியிருந்தது..
பழிவாங்குதல்
பலவிதம்..
இந்த வினா
எடுத்ததும்
அதில் ஒருவிதம்..
ந.வீரா
திமிரி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...