பிளஸ்-2
வேதியியல் வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள்
மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி
தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேதியியல் கணக்குப்
பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன.
வேதியியல் தேர்வெழுதிய மாணவர்கள் கூறும்போது, ``வேதியியல் வினாத்தாளில் நன்கு தெரிந்த வினாக்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தன. 2 மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் தலா ஒரு கேள்வி மட்டும் சற்று யோசித்து பதிலளிக்கும்படி இருந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறோம்'' என்று தெரிவித்தனர்.
கணக்குப் பதிவியியல் தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், மறைமுக வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை; பருவத் தேர்வுகளில் இடம்பெற்றிருந்த சில வினாக்களே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன. இந்த வினாத்தாளில் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்கலாம் என்றனர்.
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய தேர்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.அனைத்து தேர்வுகளும் வரும் 22-ம் தேதியுடன் முடிவடைகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...