வெள்ளி கோள் |
பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்
குறள்:374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
விளக்கம்:
உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
Penury pinches all
பசிவந்தால் பத்தும் பறந்து போகும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. கல்வியும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
உலகம் ஒரு கண்ணாடி போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த எண்ணங்களின் உண்மையான பிரதிபலிப்பைக் காட்டுகிறது. உங்கள் மனதை ஆளுங்கள் இல்லையெனின் அது உங்களை ஆளும். --கெளதம புத்தர்
பொது அறிவு :
1. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?
விடை: துருக்கி
2.பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கோள் எது?
விடை: வீனஸ் (வெள்ளி)
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
குப்பை மேனி கீரை : குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.
நீதிக்கதை
ஆசை யாரை விட்டது.
ஒரு பெரிய இருள் நிறைந்த காட்டில் ஒரு நரி வசித்து வந்தது. அது வெகு நாட்களாக இரை கிடைக்காது பட்டினியுடன் அலைந்தது. அதற்கு சாப்பாடு என்றால் ஆசை அதுவும் மனிதனின் இறைச்சி என்றால் வெகு ஆசை. பல இடங்களில் உணவுக்காக அலைந்தும் ஒன்றுமே கிடைக்காது வருத்தம் கொண்டது.
சரி ! உணவில்லாமல் வாழ முடியாதே என்று உணவைத் தேடலாம் என்று மனம் போன போக்கில், கால் போன போக்கில் அலைந்து திரிந்தது. வெகுதூரம் சென்று கொண்டிருந்த இவருக்கு கடைசியில் ஒரு பெரிய இறைச்சித் துண்டை பார்த்தது. மனம் மகிழ்ந்து துள்ளிக் குதித்தது. அதைப் பார்த்தவுடன் அதன் நாவில் நீர் ஊறத் தொடங்கியது. ஆசை மேலிட அந்த இரையைப் பார்த்து மகிழ்ந்து, சாப்பிடாமல்,அது கிடைத்து விட்டதே என்ற மகிழ்ச்சியில் அந்த இரையைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதற்கு ஆசை தாளாது இருந்ததால், அந்த இறைச்சியைத் தன் வாயிலே லபக் கென்று கவ்விக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து சென்றது. யாராவது எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்ற பயம் வேறு. தன்னுடைய இருப்பிடம் செல்ல வேண்டுமென்றால் எப்படியும் நீர் நிறைந்த ஒரு பெரிய ஓடையைக் கடந்துதான் செல்லவேண்டும். என்ன செய்வது? தண்ணீரோ நிரம்பி ஓடுகிறது. "வாயில் இறைச்சியை வைத்துக்கொண்டு கவனமாக தான் செல்லவேண்டும். இறைச்சியும் கீழே விழாமல் பாதுகாக்க வேண்டுமே, எவ்வளவு நாட்கள் கழித்துக் கிடைத்திருக்கிறது அது" என்று சிந்தனையில் ஆழ்ந்தது.
வீடு போகும் வழியில் இருக்கும், நீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கும் வாய்க்காலைக் கடந்தாக வேண்டுமே என்று எண்ணிய நரியார் என்ன செய்தது
தெரியுமா? தான் கவ்விக் கொண்டிருக்கும் இறைச்சியை கீழே விழாதவாறு மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. வாய்க்காலில் குறுக்கும் நெடுக்குமாக மீன் கூட்டங்கள் வேறு அலைந்து கொண்டிருந்தன. பார்க்கவே மிக அழகாக இருந்தது. மீன்களினின்றும் கிளம்பிய ஒளி, அந்த நரியை வெகுவாகக் கவர்ந்தது.
"ஆஹா! எவ்வளவு மீன்கள். வித விதமான மீன்கள் எல்லாம் பார்க்கவே அழகாகவே இருக்கின்றனவே!. 'என்னை எடுத்துக் கொள்' என்று சொல்கிறமாதிரி இருக்கிறதே" என்று எண்ணியது.
அந்த ஓடையில் பலவகையான நல்ல வரிகளையுடைய வரால் மீன்கள், நீல நிறம் கொண்டு பள பளப்புடன் மின்னி, நரியின் கவனத்தை ஈர்த்தாலும், ஓடும் தண்ணீர் வேகமாகச் சுண்டி இழுத்ததனால். நரியால் அந்த ஆழத்தையும்,வேகத்தையும் தாக்குப் பிடிக்க முடியாது திண்டாடியது. இருந்தாலும் தன் வாயில் இருந்த இறைச்சி விழுந்துவிடுமோ என்று அஞ்சி, அதை விட்டு விடாது மெதுவாகத் தண்ணீரில் நீந்திக்கொண்டே சென்றது.வரால் மீன்கள் நரியின் வாலிலும், காலிலும் பட்டுத் துள்ளிக் குதித்து, “என்னைப் பிடி பார்க்கலாம்" என்று சவால் விடுவது போல் அதன் கையில் சிக்காது ஓடின. நீரையும் அடித்துத் தள்ளின. எவ்வளவு தான் நரியால் இந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியும்?, அதன் நாவில் வேகமாக நீர் ஊறிற்று. நப்பாசை வேறு மிகுந்து காணப்பட்டது.
இத்தனை மீன்களும் கிடைத்தால் எனக்கு அதிர்ஷ்டம் தான், இன்று நல்ல விருந்துதான்" என்று எண்ண ஆரம்பித்து, அதற்கு ஆசை அதிகமாகி விட்டது. 'மீன் சுவையோ தேன்சுவையோ' என்று சொல்வார்கள் அல்லவா? ஒரு வரால் மீன் நீரை எதிர்த்து ஒய்யாரமாக நிற்பதைக் கவனித்தது நரி.
உடனே ஒரே பாய்ச்சலில் வாயைத் திறந்து கொண்டு நரி, அந்த வரால் மீனைப் பிடிக்க முற்பட்டது. ஆனால் அந்த மீன் நழுவி, நரியின் கையில் சிக்காது வேகமாக இங்கும் அங்கும் ஓடி விளையாட்டுக் காட்டியது. நரி வாயைத் திறந்த அந்த நேரத்தில் வாயிலிருந்த இறைச்சித் துண்டமும் நீரில் வழுக்கி விழுந்துவிட்டது. இதை அந்த நரி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இப்பொழுது இறைச்சியும் இல்லை, வரால் மீனும் இல்லை என்ற நிலை நரிக்கு. நீரில் மிதந்த மீனுக்கு ஆசைப்பட்டு, வாயில் இருந்த இறைச்சியையும் வீணே நீரில் விட்டது. பேராசை பெரு நஷ்டம் என்பது இதுதானோ!
'வாய்க்கு எட்டியது வயிற்றுக்கு எட்டவில்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, மற்றவைக்கு ஆசைப்பட்டு இருந்ததையும் இழந்தது நரி.
நம்முடைய அறிவு எந்த நிலையில் இருக்கிறது? என்று நாம் சற்றுச் சிந்தித்து நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...