இதற்கிடையே, பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு கடினமாக இருந்ததாகவும், அதிக அளவில் மறைமுக வினாக்கள் இடம் பெற்றதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் 9, 10, 12, 15, 20 ஆகியவினாக்கள் பாடப் பகுதியின் ள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தன. அதற்கு பதில் அளிப்பது மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. அதேபோல, 2 மதிப்பெண் பகுதியில் 28 மற்றும் 30-வது கேள்விகள் (இலக்கண பகுதி) மறைமுக வினாக்களாக இருந்தன. சுமார் 8 முதல்10 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் 3 மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதாகவே இருந்தன’’ என்றனர்.
பிளஸ் 1 வகுப்புக்கான இயற்பியல், கணினி தொழில்நுட்பம், பொருளியல் பாடங்களுக்கான தேர்வுகள் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளன.பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. ஏற்கெனவே நடைபெற்ற பிளஸ் 2 ஆங்கில பாடத் தேர்வும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...