Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IT Return போது CPS தொகையைக் கழித்து Refund பெறுவது குற்றமா? ✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

images(25)

Old Regimeன் 80CCD1Bல் 50,000 CPS கழிவு உண்டா? New Regimeல் CPS கழிவு உண்டா? IT Return போது CPS தொகையைக் கழித்து Refund பெறுவது குற்றமா?


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


வினாவிற்கான விடையறியும் முன்னர், CPS தொடர்பான வருமானவரி பிரிவுகளைப் பற்றி தெளிந்து கொள்வோம்.


--- --- --- --- --- --- ---

80CCD என்பது முதன்மை CPS / NPS பிடித்தத்தைக் கழிக்க உள்ள பிரிவு. Old Regimeல் இதையும் 80Cஐயும் சேர்த்து ரூ.1,50,000 வரை கழிவு பெறலாம்.

--- --- --- --- --- --- ---

80CCD(1B) என்பது மேற்படி 80CCD+80C கணக்கீட்டில் ரூ.1,50,000 வரை காண்பித்தது போகவும் கூடுதலான CPS / NPS சந்தாத் தொகை இருப்பின் அதனைக் காண்பித்து கழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சிறப்புப் பிரிவு. இதில் அதிகபட்சம் ரூ.50,000 வரை காட்டலாம். GPF / TPFல் இருப்போர் தனியாக NPS திட்டத்தின் TIRE-Iல் நிதி செலுத்தி வந்திருப்பின் அவர்களும் இப்பிரிவில் ரூ.50,000 வரை காட்டி கழிவு பெறலாம்.

--- --- --- --- --- --- ---


இந்திய அரசாங்கத்தின் நிதித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாட்டு வருமானவரித் துறை முதன்மை ஆணையாளரின் 29.03.2017 தேதியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, CPS(NPS) சந்தாதாரர்கள் தமது சந்தாத்தொகையில் ரூ.50,000/- வரை 80CCD(1B)ன் கீழ் காண்பித்துக் கழித்துக் கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். அக்கடிதம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.


இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன் என்போர் இதற்கான மறுப்புக் கடிதத்தை மேற்படி தமிழ்நாட்டு வருமானவரித் துறை முதன்மை ஆணையாளரிடம் இருந்து பெற்று அதைக் காண்பித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். மேலும், இப்போது உயர் அலுவலரிடம் உரிமையைக் கேட்கப் பயந்து கொண்டு பின்னர் IT Returnல் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பீர்களானால், நாளை FORM16ல் இல்லாத எதையும் கழிக்க முடியாது என்றோ / கூடுதல் ஆவணங்களை இணைக்கும்படியோ அறிவுறுத்தப்படலாம். கவனம்.


--- --- --- --- --- --- ---

80CCD2 என்பது அரசு வழங்கும் பங்குத் தொகையை வருமானவரிக் கணக்கிற்குக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட பிரிவு ஆகும். அரசின் பங்களிப்பை வருமானத்தில் காண்பித்து 80CCD2ல் கழித்துக் கொள்ளலாம். இதனால் வருமான வரி மாறாது. Its just for an accountability purpose only.


அரசின் பங்குத் தொகை State Govt. Employee = 10%. Central Government Employee = 14%.

--- --- --- --- --- --- ---


தமிழ்நாட்டு அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை CPSல் அரசின் பங்குத் தொகையை எந்த ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரும் (DDO) வருமானத்தில் காண்பிப்பது இல்லை என்பதால் Old Regimeன் 80CCD2ல் கழிக்க வேண்டிய தேவையில்லை. எப்போது நீங்கள் CPS முதிர்வுத் தொகையைப் பெறுகின்றீர்களோ அன்று அரசின் பங்களிப்பை மட்டும் வருமானத்தில் காண்பித்து 80CCD2ல் கழித்துக்கொள்ளலாம்.


எனவே இது ஊரறிந்த உண்மை என்பதால், தற்போது IT படிவத்திலோ அதனடிப்படையில் IT துறையிலிருந்து தயார்செய்து தரப்படும் Form 16னிலோ 80CCD2ன் கீழ் எந்தவிதத் தொகையும் இல்லாத நிலையில், IT Return செய்யும் போது மட்டும் மேற்படி 80CCD2ல் CPS தொகையை அப்படியே மீண்டும் அளித்து வரியைக் குறைக்கும்  தண்டனைக்குரிய குற்றத்தில் ஈடுபட்டால் IT துறை எளிதாக அடையாளம் கண்டு Notice அனுப்பும். பல வருசமா அப்படித்தான் செய்கிறேன் இதுவரை வரவில்லையே என்றால். . . தற்போது தான் IT துறை 100% கணினிமயமாக்கலுக்குள் கடந்து வந்துகொண்டிருக்கிறது என்பதால் பழைய அண்டுகளுக்கான சிக்கல்களையும் கண்டறிந்து வரும் காலங்களில் Notice அனுப்பும்.


NEW REGIMEலும் CPS / NPSன் அரசுப் பங்களிப்பை மட்டும் வருமானத்தில் காண்பித்து கழித்துக் கொள்வதற்கான வசதி உள்ளது. நினைவில் கொள்ளவும் அரசின் பங்களிப்பை வருமானத்தில் காண்பித்து கழித்துக் கொள்ள. நாம் முன்னர் பார்த்தபடி தமிழ்நாட்டிற்கு இது இப்போதைக்குத் தேவையற்றது. ஊழியர்களின் CPS சந்தாத் தொகையை NEW REGIMEல் கழிக்க முடியாது.

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive